மாலி: பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு - 14 பேர் பலி


மாலி: பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு - 14 பேர் பலி
x
தினத்தந்தி 17 July 2018 1:48 AM GMT (Updated: 17 July 2018 1:48 AM GMT)

மாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். #Mali

பாமாகோ,

மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.

மாலி நாட்டில் நைஜர் எல்லை அருகே 55 மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில், இந்த மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை தடுத்து நிறுத்துவதற்காக அவர்களை அச்சுறுத்தும் விதத்தில், இனவாத குழுக்கள் மற்றும் ஜிஹாதிஸ்ட் போராளிகளால் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது..

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த கிராமத்தில் நுழைந்த பயங்கரவாதிகள் அப்பகுதியில் உள்ள மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில், ஒரு டிரக் மற்றும் மற்ற மூன்று வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story