உலக செய்திகள்

30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காதவர் + "||" + 70 year old man has not sleep for 30 years

30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காதவர்

30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காதவர்
சவுதி அரேபியாவில் 70 வயது நபர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவை சேர்ந்த அந்த  நபர் தமது நிலை தொடர்பாக  பல மருத்துவர்களை அணுகியும் அவர்களால் இதுவரை உறுதியான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது சவுதி ராணுவத்தில் சேவையாற்றிய காலகட்டத்தில் தொடர்ந்து 20 நாட்கள் அந்த நபர்  தூங்காமல் கண்விழித்துள்ளார்.

ராணுவ சேவையை முடித்துக் கொண்ட பின்னர் மருத்துவமனை சென்று தமது நிலைக்கு காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரித்துள்ளார்.இதனையடுத்து 4 நாடுகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று பரிசோதித்துள்ளது.அவர்களால் உரிய காரணத்தை கண்டறியமுடியவில்லை என்றபோதும், குறித்த நபரின் மன அழுத்தமே காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தாலும், இதுவரை அவரால் தூங்க முடியவில்லை என கூறப்படுகிறது.இதனிடையே அல் பஹா பகுதி ஆட்சியர் இவரது நிலை குறித்து தெரிய வந்து விசாரித்துள்ளார். அவரிடம் தமக்கு ஒரு கார் மாட்டும் போதும் என தெரிவித்ததை அடுத்து புதிய கார் ஒன்றை பரிசாக அளித்தது மட்டுமின்றி, எஞ்சிய காலம் மட்டும் அவரது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார் அல் பஹா ஆட்சியர்.


தொடர்புடைய செய்திகள்

1. பாலின சமநிலையின்மை : சீனாவிற்கு கடத்தப்படும் சிறுமிகள் - பெண்கள்
பாலின சமநிலையின்மை காரணமாக சீனாவின் பக்கத்து நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் சிறுமிகள், பெண்கள் கடத்தப்பட்டு மணமுடிக்கப்படுகின்றனர்.
2. ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ மனைவியை கொலை செய்த கணவன்
ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ, மனைவியை கணவரே கொலை செய்து உள்ளார். ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
3. 17 வயதில் தந்தையான பிரபல டிவி நடிகர்
இங்கிலாந்தில் 16 வயது காதலி குழந்தை பெற்ற நிலையில் 17 வயது சிறுவன் தந்தையான சம்பவம் நடந்துள்ளது.
4. பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து கத்தார் விலகல்
பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைப்பான ‘ஒபக்’ அமைப்பில் இருந்து விலகப்போவதாக கத்தார் திடீரென அறிவித்துள்ளது.
5. 'நாம் அனைவரும் சாகப் போகிறோம்': நடுவானில் அலறிய இந்திய பெண்ணுக்கு சிறை
இங்கிலாந்து செல்லும் விமானத்தில் குடிபோதையில் இந்திய வம்சாவளி பெண் செய்த செயலுக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.