பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் தவறான தகவல்கள் அழிக்கப்படும் - மார்க் ஜூக்கர்பெர்க்


பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் தவறான தகவல்கள் அழிக்கப்படும் - மார்க் ஜூக்கர்பெர்க்
x
தினத்தந்தி 21 July 2018 8:27 AM GMT (Updated: 21 July 2018 8:27 AM GMT)

பேஸ்புக் தளத்தில் உள்ள தவறான செய்திகள், தனி மனிதரை தாக்கி பகிரப்படும் தகவல்கள் ஆகியவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார். #MarkZuckerberg

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த  பேஸ்புக்  மார்க் ஜக்கர்பெர்க்  கூறியதாவது:-

" சமூக வளைதளங்கள் வன்முறையை தூண்டும் விதமாக மாறி வருகிறது. மியான்மர், இந்தியா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் பகிரப்படும் தகவல்களால் வன்முறைகள் வெடிக்கின்றன. பேஸ்புக் தளத்தில் பரப்பப்படும் புரளிகளால் சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர்" 

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ் அப்களில் பகிரப்படும் தவறான தகவல்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. வாட்ஸ் அப்பில் பரவிய தவறான தகவல்களால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு சரியான ஒரு தீர்வு வேண்டும்.

இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் மக்கள் பேஸ்புக் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 2019ம் ஆண்டு நடக்க இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் பேஸ்புக் தளத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் .

வரும் காலங்களில் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி நடக்க இருக்கும் தவறுகளை குறைக்கவும், அவற்றை தவிர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  இனி நடக்க இருக்கும் அனைத்து தேர்தல்களிலும் பேஸ்புக் தளம் தீவிரமாக கண்காணிக்கப்படும். தனி மனிதரை விமர்சித்து பதிவிடப்படும் பகிர்வுகள் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துகிறது.

உலக அளவில் இரண்டு பில்லியன் மக்கள் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் சில நன்மைகளை அடைந்துள்ளனர். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தீமை ஏற்படுவதை தவிர்ப்பது எங்களின் தலையாய கடமை என்று கூறினார்.

Next Story