சூரியனை ஆய்வு செய்ய பார்க்கர் சோலார் உருகாமல் சூரியனை எவ்வாறு அடையப் போகிறது? வீடியோ


சூரியனை ஆய்வு செய்ய பார்க்கர் சோலார்  உருகாமல் சூரியனை எவ்வாறு  அடையப் போகிறது? வீடியோ
x

இன்னும் 2 வாரங்களில் சூரியனை ஆய்வு செய்ய செல்லும் பார்க்கர் சோலார் திட்டம்! எவ்வாறு உருகாமல் சூரியனை அடையப் போகிறது? வீடியோ #Parker_Solar_Probe

வாஷிங்டன்

சூரியன் குறித்த தகவலை திரட்டி வர கடந்த 1970 களில் விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலமான ‘ஹீலியஸ் 2’ சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. அதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் (Solar Wind)  தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை!

ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கக்கும் சூரியனையே, சுமார் ‘நாற்பது லட்சம் மைல்கள்’ தொலைவில் அல்லது மிக அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) எனும் செயற்கைகோளை ஆகஸ்ட் 6 தேதி அனுப்புகிறது.  இன்னும் சில வாரங்களே உள்ளன. 

சூரியன் மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ‘சூரிய புயல்’ அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகுதியில் பறக்கும் என்றும், சுமார் 1,400 செல்சியஸ் (2,500 பாரன்ஹீட்) வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக்கத்தையும் தாங்கி, எதிர்கொண்டு ஆய்வு செய்யும் திறன்கொண்டது என்றும் கூறப்படுகிறது. 

ஏனென்றால், இந்த செயற்கைகோள் அதீத தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் சுமார் 11.4 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் உள்ள கார்பன் காம்போசிட்டால் ஆன கவசத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய திறன்கொண்ட பார்க்கர் சோலார் புரோப், சுமார் 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்கிறது நாசா. 

சூரியனின் கரோனா  பகுதியில் பார்க்கர் சோலார் புரோப் பயணிக்கிறது, அப்பகுதி வெப்பநிலை கூடிய பகுதி, அடர்த்தி குறைவு. தற்போது நீங்கள் கைகளை கொதிக்கும் நீரில் விடுவதையும், சூட்டடுப்பில் (Hot Oven) விடுவதையும் கற்பனை செய்து பாருங்கள். சூட்டடுப்பில் கைகள் கொதிநீரிலும் பார்க்க நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை தங்களால் உணர முடிகிறதா?

இதேபோல் சூரியனின் கண்ணுக்குப் புலப்படக்கூடிய மேற்பரப்பை விட கரோனா பகுதியின் அடர்த்தி குறைவு. எனவே விண்கலம் குறைந்தளவிலான துணிக்கைகளுடனேயே தொடுகையிலிருக்கும். இதனால் அதிகளவிலான சக்தியை உள்வாங்கிக்கொள்ளாது.

அதாவது அதன் பாதுகாப்புக் கவசம் 1644 டிகிரி கெல்பின் அளவிற்கே வெப்பமாக்கப்படக்கூடியது. இக் கவசம் நன்கு வெப்பமாக்கப்பட்ட காபன்-காபன் கலப்பு தட்டுக்களாலானது. சூரியனை நோக்கிய பகுதி வெள்ளை வர்ணம் தீட்டப்பட்டுள்ளதால் அது பெருமளவிலான ஒளிக்கதிர்களை தெறிக்க வைக்கிறது. இது தனக்கு அப்பாலுள்ள பொருட்களை 300 கெல்பினுக்கு குறைவாகப் பேணுகிறது. மொத்த பார்க்கர் சோலார் புரோப் அமுக்கமாக்கப்பட்ட வடிகட்டிய நீர் கொண்டு குளிராக்கப்படுகிறது. இந் நீரானது Probe வெளிக்காட்டப்படும் வெப்பநிலைக்கு தாக்குப்பிடிக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story