பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் இம்ரான் கான் கட்சி முன்னிலை

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் இம்ரான் கான் கட்சி முன்னிலை வகிக்கிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் இம்ரான் கான் கட்சி முன்னிலை
Published on

இஸ்லமபாத்,

பாகிஸ்தானில் 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடக்கிறது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர்கள் உள்ளனர்.இதில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

ஓட்டு பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும் மாகாண தேர்தல்களுக்கான வாக்கு பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கி உள்ளது.

வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்து மக்கள் ஆர்வமுடம் வாக்களித்து வந்த நிலையிலும், சில இடங்களில் வன்முறை நடைபெற்றது. குறிப்பிடும் படியாக குவெட்டா நகரில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் தமீர் இ நவ் கல்வி பள்ளிக்கூட காம்ளெக்சில் உள்ள வாக்கு சாவடிக்கு வெளியே தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 35 பேர் பலியாகி உள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இஇன்சாப் கட்சி முன்னிலை வகிக்கிறது. அடுத்த இடத்தில், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது.

பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது. 24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் என கூறப்படுகிறது. 272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com