உலக செய்திகள்

தேர்தல் முடிவுகளை வெற்று காகிதத்தில் கைப்பட எழுதி தந்த அதிகாரிகள்; பாகிஸ்தானில் சர்ச்சை + "||" + Election Commission of Pakistan officials handed out Election results on plain paper

தேர்தல் முடிவுகளை வெற்று காகிதத்தில் கைப்பட எழுதி தந்த அதிகாரிகள்; பாகிஸ்தானில் சர்ச்சை

தேர்தல் முடிவுகளை வெற்று காகிதத்தில் கைப்பட எழுதி தந்த அதிகாரிகள்; பாகிஸ்தானில் சர்ச்சை
பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகளை விதிகளின்படி படிவம் 45ல் வெளியிடுவதற்கு பதிலாக வெற்று காகிதத்தில் எழுதி தந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லாஹூர்,

பாகிஸ்தானில் 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடந்தது.  அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

இதில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 

ஓட்டு பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.  இந்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும் மாகாண தேர்தல்களுக்கான வாக்கு பதிவு நேற்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

தேர்தலை முன்னிட்டு நேற்று அந்நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த தேர்தலில் வாக்கு பதிவு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணிகளுக்காக 4 லட்சத்து 49 ஆயிரத்து 465 போலீசாரும் மற்றும் 3 லட்சத்து 70 ஆயிரம் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் நேற்று குண்டுவெடிப்பு நடந்தது.  இந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.  40 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.  தேர்தல் நடைபெறுவதற்கு முன் பிரசாரம் மற்றும் பேரணியின்பொழுது முக்கிய தலைவர்களை இலக்காக கொண்டு நடந்த தாக்குதல்களில் 180 பேர் வரை பலியாகி இருந்தனர்.

இந்த நிலையில், தேர்தல் முடிந்தபின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  தொடர்ந்து இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பல இடங்களில் முன்னிலை வகித்துள்ளது.  அக்கட்சி 119 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 56 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 34 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.

அந்நாட்டின் தேர்தல் ஆணைய விதிகளின்படி தேர்தல் முடிவுகளை படிவம் 45ல் வெளியிட வேண்டும்.  ஆனால், பாகிஸ்தானின் கி மற்றும் ஐதராபாத் தொகுதிகளில் நடந்த தேர்தல் முடிவுகளை வெற்று காகிதம் ஒன்றில் கைப்பட எழுதி அதிகாரிகள் தந்துள்ளனர்.  இதனால் பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.