உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world ...

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கொல்ல முயற்சி செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

* வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் வேகமாக சென்ற பஸ் மோதி 2 வாலிபர்கள் உயிர் இழந்ததால் ஆத்திரம் அடைந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் போக்குவரத்து சட்டத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 9-வது நாளை எட்டியது. இதையடுத்து சாலை விபத்துகள் தொடர்பான வழக்குகளில் அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க சட்ட அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

* வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கொல்லும் முயற்சியில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆரஞ்ச் கவுண்டி அருகே பறந்துகொண்டிருந்த குட்டி விமானம் ஒன்று அங்கு உள்ள வணிக வளாகத்தில் கார்கள் நிறுத்தும் இடத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். விமானம் விழுந்ததில் ஒரு கார் உருக்குலைந்து போனது.

* சோமாலியா தலைநகர் மொகாதிசுவில் இரு வேறு நகரங்களில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதல்களில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிர் இழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க கோரும் உண்ணாவிரதத்திற்கு ஐகோர்ட்டு அனுமதி
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க கோரும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி? கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்
தக்கலை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது குறித்து கைதான பெண் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
3. மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயி அடித்துக் கொலை
மூங்கில்துறைப்பட்டு அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் விவசாயியை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
4. வத்திராயிருப்பு அருகே டிராக்டர் டிரைவர் வெட்டிக்கொலை
வத்திராயிருப்பு அருகே டிராக்டர் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
5. திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற கள்ளக்காதலன்
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, பிணத்தை கிணற்றில் வீசிய வாலிபர் அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.