உலக செய்திகள்

ஒசாமா பின்டேலனின் மகன் அமெரிக்காவை பழி தீர்க்க திட்டமிட்டிருப்பதாக சகோதரர்கள் தகவல் + "||" + Osama is the son of bin laden   Plans to revenge America Brothers informed

ஒசாமா பின்டேலனின் மகன் அமெரிக்காவை பழி தீர்க்க திட்டமிட்டிருப்பதாக சகோதரர்கள் தகவல்

ஒசாமா பின்டேலனின் மகன் அமெரிக்காவை பழி தீர்க்க திட்டமிட்டிருப்பதாக சகோதரர்கள் தகவல்
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்டேலனின் மகன் அமெரிக்காவை பழி தீர்க்க திட்டமிட்டிருப்பதாக அவரது சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்டியன் ஆங்கில நாளிதழுக்கு பின்லேடனின் சகோதர்கள் அகமது மற்றும் ஹாசன் அல் அட்டாஸ் அளித்த பேட்டியில் கூறி உள்ளனர். பின்லேடனின் மகன் ஹம்சா, செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தியவரும் , அதற்காக விமானத்தை கடத்தியவர்களில் முக்கியமானவருமான முகம்மது அட்டாவின் மகளைத் திருமணம் செய்துள்ளான்.

 2011-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க ராணுவத்தால் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தன் தந்தையின் சாவுக்கு பழி தீர்க்கத் திட்டம் தீட்டி வருவதாகவும், பின்லேடனின் சகோதரர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அல் கொய்தா தீவிரவாத அமைப்பில், ஹம்சா முக்கிய பொறுப்பை ஏற்று கொண்டுள்ளதாகவும், அவர் இப்போது எங்குள்ளார் என்பது தெரியவில்லை. ஆனால் எங்கள் கணிப்பின் படி அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்று பின்லேடனின் சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.