மெரினாவை பராமரிக்க ஒதுக்கும் நிதி எவ்வளவு? - சென்னை மாநகராட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு | மெரினாவில் காவல் ஆணையருடன் காலை நடைபயிற்சி மேற்கொள்ள, மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை | மெரினாவில் என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன? - உயர்நீதிமன்றம் | ஆந்திரா காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள பெய்ட்டி புயல், மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து பிற்பகலில் கரையைக் கடக்கும்- வானிலை மையம் | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் - சென்னை வானிலை மையம் | பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் சந்திப்பு |

உலக செய்திகள்

பாகிஸ்தானில் பாடகி ரேஷ்மா கணவரால் சுட்டு கொல்லப்பட்டார் + "||" + Pak Actress-Singer Reshma Shot Dead, Allegedly By Husband

பாகிஸ்தானில் பாடகி ரேஷ்மா கணவரால் சுட்டு கொல்லப்பட்டார்

பாகிஸ்தானில் பாடகி ரேஷ்மா கணவரால் சுட்டு கொல்லப்பட்டார்
பாகிஸ்தானில் பாடகி ரேஷ்மா தனது கணவரால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துங்குவாவில் நவ்ஷெரா கலான் பகுதியில் வசித்து வந்தவர் பாடகி ரேஷ்மா.  இவர் அந்நாட்டில் புகழ் பெற்ற பேஷ்டோ பாடல்களை பாடி வந்துள்ளார்.  ஜோபல் கோலூனா என்ற பிரபல நாடகத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கணவரை பிரிந்து தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.  இவரது கணவருக்கு இவர் 4வது மனைவி ஆவார்.  இந்த நிலையில், அவரது வீட்டிற்குள் நுழைந்த கணவர் ரேஷ்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.  இதில் ரேஷ்மாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.  இது பாகிஸ்தானின் கைபர் பக்துங்குவாவில் பெண் கலைஞர்களுக்கு எதிராக இந்த வருடத்தில் நடைபெறும் 15வது சம்பவம் ஆகும்.

கடந்த பிப்ரவரி 3ந்தேதி நிகழ்ச்சி ஒன்றில் குற்றவாளியுடன் கலந்து கொள்ள தொடர்ந்து மறுத்து வந்த மேடை நடிகையான சன்புல் சுட்டு கொல்லப்பட்டார்.தொடர்புடைய செய்திகள்

1. புலி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: அரசு மீது சிவசேனா கடும் தாக்கு
புலி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அரசை சிவசேனா கடுமையாக தாக்கி பேசியுள்ளது.
2. காஷ்மீரின் வடக்கே பாதுகாப்பு படை தாக்குதல்; 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரின் வடக்கே பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
3. 2 குழந்தைகளை கொன்று பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவருடைய கணவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
4. மற்ற பெண்களுடன் தொடர்பு என மனைவி சந்தேகம்; கணவரின் ஆணுறுப்பு துண்டிப்பு
மற்ற பெண்களுடன் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் கணவரின் ஆணுறுப்பினை மனைவி கத்திரிகோலால் துண்டித்துள்ளார்.
5. யூ டியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: கர்ப்பிணி பலி; கணவர் மீது வழக்கு பதிவு
யூ டியூப்பினை பார்த்து வீட்டிலேயே பிரசவம் செய்ததில் கர்ப்பிணி ஒருவர் பலியான சம்பவத்தில் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.