அமெரிக்காவில் 71 வயது சீக்கியர் தாக்குதல் வழக்கில் தலைமை காவலரின் மகன் கைது


அமெரிக்காவில் 71 வயது சீக்கியர் தாக்குதல் வழக்கில் தலைமை காவலரின் மகன் கைது
x
தினத்தந்தி 9 Aug 2018 7:22 AM GMT (Updated: 9 Aug 2018 7:22 AM GMT)

அமெரிக்காவில் 71 வயது சீக்கியர் தாக்கப்பட்ட வழக்கில் தலைமை காவலரின் மகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் சீக்கியர் சாஹிப் சிங் நாட் (வயது 71).  இவர் மேன்டெகா பகுதியில் உள்ள சாலையில் கடந்த திங்கட்கிழமை தனியாக நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார்.  அவர் மீது 2 பேர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.  இந்த வீடியோ காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

அவர் எதிரே 2 பேர் கருப்பு உடை அணிந்தபடி வந்துள்ளனர்.  சிங்கை கண்டதும் அவரை தடுத்து நிறுத்தி பேச்சு கொடுத்துள்ளனர்.  அவர்களிடம் பேசி விட்டு அங்கிருந்து சிங் செல்கிறார்.

சிங்கை பின்தொடரும் அவர்கள் மீண்டும் பேச்சு கொடுக்கின்றனர்.  நீண்ட வாதத்திற்கு பின்னர் கருப்பு சட்டை அணிந்த ஒருவர் சிங்கின் வயிற்றில் காலால் உதைக்கிறார்.  இதில் சிங் சாலையில் விழுகிறார்.  அவரது தலைப்பாகையும் கீழே விழுகிறது.

சிங் எழுந்து நின்று தற்காத்து கொள்ள முயன்றபொழுது மீண்டும் அவரது வயிற்றில் உதைத்துள்ளார்.  இதில் கீழே விழுந்த அவரை நெருங்கிய அந்த நபர் சிங்கின் முகத்தில் எச்சில் துப்புகிறார்.  சிங் சாலையில் விழுந்து கிடக்க 2 பேரும் நடந்து செல்கின்றனர்.

ஒரு சில வினாடிகளில் கருப்பு சட்டை அணிந்த நபர் மீண்டும் ஓடி வந்து சிங்கின் தலை அருகே 3 முறை காலால் உதைக்கிறார்.  அதன்பின் நடந்து செல்லும் அந்த நபர், திரும்பி, சிங் மீது எச்சில் துப்புகிறார்.  ஒரு வாரத்தில் சீக்கியர் மீது நடைபெறும் 2வது தாக்குதல் இதுவாகும்.

இந்த நிலையில், இது இனவெறியால் நடத்தப்பட்ட தாக்குதலா? என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் 16 வயது சிறுவனை நேற்று போலீசார் கைது செய்தனர்.  தொடர்ந்து டைரோன் மேக்அல்லிஸ்டர் (வயது 18) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர் நகர காவல் துறை அதிகாரி டேரைல் என்பவரின் மகன் என தெரிய வந்துள்ளது.  சீக்கிய முதியவரிடம் கொள்ளை முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டைரோன் பல மாதங்களுக்கு முன்பே வீட்டில் இருந்தும் மற்றும் குடும்பத்தில் இருந்தும் ஒதுங்கி தவறான கூட்டத்தில் இணைந்து வாழ்ந்து வருகிறார் என டேரைல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 31ந்தேதி அமெரிக்காவின்கலிபோர்னியாவில்கேயெஸ்சாலையில்தேர்தல் பிரசாரபணிகளில் ஈடுபட்டு இருந்த 50 வயதுநிறைந்தசீக்கியர்சுர்ஜித் என்பவர் மீதுஅந்தவழியேவந்த 2 வெள்ளைஇனத்தவர்கள்கடுமையாகதாக்குதல்நடத்திஉள்ளனர்.  தொடர்ந்துஅவர்கள்,உன்னையாரும்இங்கேவரவேற்கவில்லைஉன்னுடையநாட்டிற்குதிரும்பிபோஎன்றும்கூச்சலிட்டுஉள்ளனர்.

அதனுடன்சீக்கியரின்வாகனம்மீதுபெயிண்ட்கொண்டுஉன்னுடையநாட்டிற்குதிரும்பிபோஎன்றும்அவர்கள்கருப்புவண்ணத்தில்எழுதியுள்ளனர்.

உலக அளவில் 5வதுஇடத்தில்உள்ளபிரபலம்வாய்ந்தமதம்என்றபெருமையைசீக்கியமதம்பெற்றுள்ளது.  அமெரிக்காவில் 5 லட்சம்சீக்கியர்கள்வசிக்கின்றனர்.  2018ம்வருடதொடக்கத்தில்இருந்து, இங்குவாரம்  ஒன்றிற்குஒருசீக்கியர்தாக்கப்படுகிறார்எனசீக்கியர்களுக்கானகூட்டமைப்புதெரிவித்துஉள்ளது.


Next Story