4 வயது குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்ட பெண்


4 வயது குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்ட பெண்
x
தினத்தந்தி 10 Aug 2018 3:44 PM IST (Updated: 10 Aug 2018 3:44 PM IST)
t-max-icont-min-icon

விமான பயணத்தின் இடையே மது அருந்திய தாயார் ஒருவர் தமது 4 வயது மகளுடன் துபாயில் சிறைவாசம் அனுபவித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


லண்டனை சேர்ந்தவர் எல்லி ஹோல்மேன் ( 44)  பல் மருத்துவர் . இவர் கேட்விக் விமான நிலையில் இருந்து  கடந்த ஜூலை 13 ஆம் தேதி மருத்துவர் எல்லி தமது 4 வயது மகளுடன் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் சென்றுள்ளார். அவருக்கு உணவுடன் ஒரு கோப்பை திராட்சை மது வழங்கப்பட்டுள்ளது. துபாயில் தரையிறங்கியதும் பரிசோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அவரது விசாவானது காலாவதியாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவர் மது அருந்தியுள்ளதாகவும், அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெரிவித்துள்ளனர்.

சிறையில் இருந்த 3 நாட்களும் போதிய உணவு, மாற்று உடை என எதுவும் வழங்கப்படவில்லை எனவும், கழிவறை கூட சுத்தமாக இல்லை எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 3 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர் தற்போது ஜாமினில்  வெளிவந்திருக்கும் எல்லி குழந்தையை கணவரிடம் ஒப்படைத்து இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்துள்ளார். விசாரணை முடியும் வரை எல்லி துபாய் விட்டு வெளியேற முடியாது என்பதால் தமது நண்பர்களுடன் தற்போது தங்கி வருகிறார்.
1 More update

Next Story