மாமனார், மாமியாருக்கு குடியுரிமை வழங்கி சர்ச்சையில் சிக்கினார் டொனால்டு டிரம்ப்


மாமனார், மாமியாருக்கு குடியுரிமை வழங்கி சர்ச்சையில் சிக்கினார் டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 10 Aug 2018 12:03 PM GMT (Updated: 10 Aug 2018 12:03 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது மாமனார், மாமியாருக்கு குடியுரிமை வழங்கியது அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #DonaldTrump





அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் மனைவி மெலானியாவின் பெற்றோர் விக்டர்-அமலிஜா நவ்ஸ் இருவரும் சுலோவேனியா நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களில் விக்டர் கார் விற்பனையாளராகவும், அமலிஜா ஜவுளி தொழிற்சாலையிலும் பணிபுரிந்தனர். இவர்கள் செவ்னிகா நகரில் தங்கியிருந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உறுதிமொழியையும் அவர்கள் இருவரும் நியூயார்க் நகரில் எடுத்துக் கொண்டனர்.

மெலானியாவின் பெற்றோர் சமீபத்தில் தான் கிரீன் கார்டு பெற்றனர். ஆனால் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே கிரீன் கார்டு பெற வேண்டும் என்பது விதியாகும். இதன் காரணமாக, டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி விக்டர்-அமலிஜாவுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறுவதற்கான குடியுரிமை கொள்கையை டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்தும் எதிர்த்தும் வரும் நிலையில், தனது குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story