இன்று பகுதி நேர சூரியகிரகணம் : இந்தியாவில் பார்க்க முடியாது


இன்று பகுதி நேர சூரியகிரகணம் : இந்தியாவில் பார்க்க முடியாது
x
தினத்தந்தி 11 Aug 2018 10:02 AM GMT (Updated: 11 Aug 2018 10:02 AM GMT)

இன்று பகுதி நேர சூரியகிரகணம் தோன்றுகிறது. இருப்பினும், இதை இந்தியாவில் பார்க்க முடியாது



சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேரக்கோட்டில் அமைவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் கடைசி பகுதி நேர சூரிய கிரகணம் இன்று தோன்றுகிறது. 

உலகின் வடபகுதியில் உள்ள நாடுகளில் இந்த சூரிய கிரகணம் நன்றாகத் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் கனடா, வட அமெரிக்கா, சைபீரியா, கிரீன்லாந்து, ஸ்காண்டிநேவியா உள்ளிட்ட நாடுகளிலும், ஒரு சில மத்திய ஆசிய நாடுகளிலும் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது. 

சந்திரன் சூரியனை விட்டு சற்று விலகும் போது, சூரிய கிரகணம் பார்க்க ஒரு வைர மோதிரம் ஒளிருவது போல தெரியும். ‘வைர மோதிர நிகழ்வு’ என அழைக்கப்படும் இந்த நிகழ்வு சைபீரியாவில் மட்டுமே தெளிவாக தெரியும் எனவும், மற்ற நாடுகளில் தெரிய வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்த வரையில், சூரிய கிரகணம் சரியாக மதியம் 1.32 நிமிடங்களுக்குத் தொடங்கி, மாலை 5.02 மணி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் இதைக் காண முடியாது.  இதனிடையே, சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்ப்பது ஆபத்து என்பதால், அதைப் பார்ப்பதற்கு என வடிவமைக்கப்பட்ட பிரத்யேக கண்ணாடிகளைப்  பயன்படுத்துமாறு நாசா வலியிறுத்தியுள்ளது

Next Story