உலக செய்திகள்

விமான ஊழியர் திருடிய விமானம் நொறுங்கி விழுந்து விபத்து + "||" + Employee steals plane from Seattle airport, crashes it shortly

விமான ஊழியர் திருடிய விமானம் நொறுங்கி விழுந்து விபத்து

விமான ஊழியர் திருடிய விமானம் நொறுங்கி விழுந்து விபத்து
அமெரிக்காவின் சியாட்டில் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் ஒன்றை ஊழியர் ஒருவர் திருடிச்சென்றார். இந்நிலையில் விமானம் புக்கட் பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. #SeattlePlaneCrash
வாஷிங்டன்,

அமெரிக்காவின் சியாட்டில் விமானநிலைத்தில் ஹாரிசான் நிறுவனத்திற்கு சொந்தமான க்யூ 400 ரக விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விமானநிலையத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் திடீரென விமானத்தை திருடி சென்றார். தகவலறிந்த விமான அதிகாரிகள், விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சீ டாக் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு ராணுவ ஜெட் விமானங்களும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. 

இதனிடையே திருடப்பட்ட விமானம் புக்கெட் பகுதியில் உள்ள சிறிய தீவு ஒன்றில் நொறுங்கி விழுந்து தீப்பிடித்து எரிந்தது. சாகசம் செய்யும் முயற்சியில் விமானத்தை திருடிச்சென்ற ஊழியர், விமானத்தை தரையிறக்கத் தெரியாமலேயே விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பயணிகள் இல்லாத சமயத்திலேயே விமானம் திருடப்பட்டுள்ளதாக கூறிய விமானம் நிறுவன அதிகாரிகள், இச்சம்பவத்தில் எந்த தீவிரவாதிகளின் சதியும் இல்லை எனத் தெரிவித்தனர்.