உலக செய்திகள்

சிகரெட் துண்டுகளை எடுத்து குப்பை தொட்டியில் போடும் காகங்கள் + "||" + Crows have been trained to pick up cigarette butts and put them in a bin

சிகரெட் துண்டுகளை எடுத்து குப்பை தொட்டியில் போடும் காகங்கள்

சிகரெட் துண்டுகளை எடுத்து குப்பை தொட்டியில் போடும் காகங்கள்
பிரான்சில் பூங்கா ஒன்றில் சுற்றுப்புற தூய்மையை பேணும் வகையில் காகங்கள் சிகரெட் துண்டுகளை எடுத்து குப்பை தொட்டியில் போடுகின்றன.

பிரான்சில் மேற்கு பகுதியில் புய் டு பவ் என்ற பூங்கா அமைந்துள்ளது.  இங்கு வரும் பொதுமக்களில் சிலர் குப்பைகளை அதற்குரிய தொட்டியில் போடாமல் சென்று விடுகின்றனர்.

இதனை தொடர்ந்து சுற்று சூழலை காப்பதற்காக பூங்கா நிர்வாகத்தினர் புதிய முடிவை எடுத்துள்ளனர்.  அவர்கள் பூங்காவை தூய்மையாக வைத்திருக்க காகங்களுக்கு பயிற்சி அளித்து உள்ளனர்.

அவை பூங்காவை சுற்றியுள்ள சிகரெட் துண்டுகள் மற்றும் சிறிய அளவிலான குப்பை பொருட்களை எடுத்து வந்து பெட்டி ஒன்றில் போடுகின்றன.  அவற்றின் நல்ல செயலுக்கு பரிசாக அதில் இருந்து உணவு பொருட்கள் வெளிவருகின்றன.

இதற்காக 6 காகங்கள் பயிற்சி பெற்றுள்ளன.  அவற்றில் சில தங்களது பணியை தொடங்கி விட்டன.  அடுத்த வாரம் மீதமுள்ளவையும் இந்த பணியில் ஈடுபட உள்ளன.

காகங்கள் புத்திசாலியானவை.  சரியான சந்தர்ப்பங்களில் மனிதர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பும் அவை விளையாட்டின் வழியே அவர்களுடனான உறவை நிலைநிறுத்தி கொள்கிறது.

இதுபற்றி  பூங்காவின் தலைவர் நிகோலஸ் டி வில்லியர்ஸ் கூறும்பொழுது, எங்களது நோக்கம் தூய்மைப்படுத்துவது என்பதுடன் நின்று விடவில்லை.  ஏனென்றால் பொதுவாக இங்கு வரும் மக்களில் பலர் தூய்மையாக இருப்பதில் கவனமுடன் உள்ளனர்.  ஆனால், சுற்று சூழலை காக்க வேண்டும் என்பதில் இயற்கை கூட நமக்கு கற்று தருகிறது என்பதனை தெரிவிப்பதற்காகவே இந்த முயற்சியில் ஈடுபட்டோம் என கூறியுள்ளார்.