உலக செய்திகள்

சிரியாவில் ஆயுதக்கிடங்கில் வெடி விபத்து: குழந்தைகள் உட்பட 39 பேர் பலி + "||" + Children among 39 civilians killed in Syria arms depot blast: monitor

சிரியாவில் ஆயுதக்கிடங்கில் வெடி விபத்து: குழந்தைகள் உட்பட 39 பேர் பலி

சிரியாவில் ஆயுதக்கிடங்கில் வெடி விபத்து: குழந்தைகள் உட்பட 39 பேர் பலி
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். #SyiraBlast
பெய்ரூட்,

சிரியா நாட்டில் ராணுவப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையே பயங்கர தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள இத்லிப் மாகாணத்தின் ஷர்மதா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர வெடிப்பொருட்கள் உள்ளடங்கிய ஆயுதக்கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வெடிவிபத்தில் இரண்டு கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்நிலையில் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் உட்பட 39 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஷர்மதாவிலுள்ள குடியிருப்பு பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் ஆயுதக்கிடங்குகளாக பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தால் குடியிருப்பு பகுதியிலுள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்து பொதுமக்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே வெடிவிபத்து குறித்து தெளிவான தகவல் ஏதும் இன்னும் பெறவில்லை. கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது என சிரியா நாட்டின் மனித உரிமைகள் பாதுகாப்பு தலைவர் ராமி அப்தெல் ரஹ்மான் கூறியுள்ளார்.