உலக செய்திகள்

உலகைச் சுற்றி.... + "||" + Around the world ....

உலகைச் சுற்றி....

உலகைச் சுற்றி....
* அமெரிக்காவில் மேலும் 6 இடங்களில் பெரிய அளவில் காட்டுத்தீ பிடித்து பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
*  ஆப்பிரிக்க நாடான மாலியில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் இப்ராகிம் பவ்பக்கர் கெய்ட்டா வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

*  பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் நேற்று நடந்த பஸ் விபத்தில் துணை ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகினர். 23 பேர் காயம் அடைந்தனர்.


*  ஆப்கானிஸ்தானை சேர்ந்த தலீபான் பயங்கரவாதிகள் குழு, உஸ்பெகிஸ்தான் சென்று உள்ளது. அந்தக் குழு அங்கு அந்த நாட்டின் அதிகாரிகளை சந்தித்து போக்குவரத்து, மின்சார தடங்கள், ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியது.

*  வங்கதேசத்தில் பயணிகள் பஸ்சுக்கு 2015–ம் ஆண்டு தீ வைத்தது தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு உள்ள முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு டாக்கா ஐகோர்ட்டு 6 மாத கால ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து உள்ளது. இருப்பினும் அவர் மீது மேலும் சில வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவர் சிறையில்தான் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.