நிலநடுக்கத்தினால் உருகுலைந்த இந்தோனேஷியா தீவு, உயிரிழப்பு எண்ணிக்கை 430-ஐ தாண்டியது


நிலநடுக்கத்தினால் உருகுலைந்த இந்தோனேஷியா தீவு, உயிரிழப்பு எண்ணிக்கை 430-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 13 Aug 2018 12:28 PM GMT (Updated: 13 Aug 2018 12:28 PM GMT)

நிலநடுக்கத்தினால் உருகுலைந்த இந்தோனேஷியா தீவில் உயிரிழப்பு எண்ணிக்கை 430 ஐ தாண்டியுள்ளது. பெரும் பொருளாதார இழப்பு நேரிட்டுள்ளது.


 ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த நாடு, நெருப்பு வளையத்தில் அமைந்து இருப்பதுதான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு பாலி, லாம்போக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளாக பதிவான அந்த நில நடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 430ஐ தாண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கம் காரணமாக இந்தோனேஷியாவிற்கு 342 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பொருளாதார இழப்பு நேரிட்டுள்ளது. இன்னும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் உருகுலைந்து காட்சியளிக்கிறது. பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள், அவர்களுக்கு உதவிகள் சென்றடைவது கிடையாது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.


Next Story