உலக செய்திகள்

மனைவியைக் கொல்வதற்காக விமானத்தைக் கொண்டு வீட்டில் மோதிய கணவன் + "||" + kill his wife With the plane Husband who stole at home

மனைவியைக் கொல்வதற்காக விமானத்தைக் கொண்டு வீட்டில் மோதிய கணவன்

மனைவியைக் கொல்வதற்காக  விமானத்தைக் கொண்டு வீட்டில் மோதிய கணவன்
தன் மனைவியைக் கொல்வதற்காக ஒரு கணவன் விமானத்தைக் கொண்டு அவள் இருந்த வீட்டில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பேஸன் பகுதியைச் சேர்ந்தவர் டூயுனி யூத். இவர் குடித்து விட்டு அவரது மனைவியைத் தாக்கியதைக் கண்ட சிலர் போலீசாரிடம் புகாரளித்ததால் போலீசார் அவரைக் கைது செய்தனர்.

ஜாமீனில் வெளிவந்த டூயுனி யூத்  தனது முதலாளியின் விமானத்தை எடுத்து வந்து தனது சொந்த வீட்டின் மீதே மோதியுள்ளார்.

இதனால் விமானத்துடன் அவர் இருந்த வீடும் தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் டூயுனி யூத் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால் அவர் யாரைக் கொலை செய்வதற்காக தனி விமானத்தையே எடுத்துக் கொண்டு வந்தாரோ அந்த மனைவி வீட்டின் பின் வாசல் வழியாக ஓடி தப்பித்து விட்டார்.