ஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த பாதிரியார்கள் அதிர்ச்சி அறிக்கை


ஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த பாதிரியார்கள் அதிர்ச்சி அறிக்கை
x
தினத்தந்தி 16 Aug 2018 11:20 AM GMT (Updated: 16 Aug 2018 11:20 AM GMT)

ஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள் ஜூரிகளின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.


பென்சில்வேனியாவில் சுமார் 300 ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்களின் மூலம்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  சிறுவர், சிறுமியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1940-களிலிருந்து முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை  பாலியல் துன்புறுத்தல்கள் செய்துள்ளதாக தற்போது மாகாண தலைமை நீதிபதிகள் குழு அதிர்ச்சி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. 

மூத்த சர்ச் அதிகாரிகளை குற்றம் சாட்டிய இந்த அறிக்கையில் தற்போது வாஷிங்டன் டி.சியில் ஆர்க்பிஷப்பாக உள்ளவரையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் குற்றம்சாட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள், பலாத்காரம் செய்த பாதிரிமார்கள் குறித்த உண்மையான  ஆவணங்கள்  கிடைக்கவில்லை.  ரகசிய சர்ச் ஆவணங்கள் தொலைந்தபடியால் பெற முடியவில்லை என்று இந்த அறிக்கைத் தெரிவித்துள்ளது.

900 பக்க அதிர்ச்சி அறிக்கையில் தலைமை ஜூரி இது பற்றி கூறும்போது,

“நிறுவன ரீதியான சீர்த்திருத்தங்கள் இருந்தும், சர்ச்சின் தனிப்பட்ட தலைவர்கள் பொதுமக்களுக்கான பொறுப்பிலிருந்து தவறியுள்ளனர்.” 

“சிறுவர், சிறுமியரை பாதிரிமார்கள் பலாத்காரம் செய்துள்ளனர், கடவுளின் மனிதர்களான இவர்கள், இதற்குப் பொறுப்பேற்காததுடன் ஒன்றுமே செய்யவில்லை என்பதுடன் இந்தப் பாவச்செயலை மறைத்தும் உள்ளனர்” 

தவறு செய்தவர்களைக் காத்ததுடன், தவறு செய்தவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க சர்ச் பாலியல் சுரண்டல்கள் எனும் புத்தகத்தை அவ்வளவு எளிதில் மூடிவிட முடியாது என்கிறார் தலைமை ஜூரி.

இதில் தவறிழைத்த நூறு பாதிரியார்கள் ஏற்கெனவே இறந்து போய்விட்டனர். பலர் ஓய்வு பெற்றுவிட்டனர், சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், சிலர் விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அட்டர்னி ஜெனரல் ஜோஷ் ஷபிரோ தெரிவித்தார்.

சுமார் 17 கோடி  கத்தோலிக்கர்களை பிரதிநிதித்துவம் செய்யும் 8 பாதிரிமார்களில் 6 பேர் மீது கடுமையான விசாரணை நடைபெற்றுள்ளதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.

பாலியல் பலாத்காரம் செய்து விட்டு குற்றம்சாட்டப்பட்ட கிளர்கியை போலீஸில் காட்டிக் கொடுக்கவும் மறுத்துள்ளனர், ரகசியக் காப்பு உடன்படிக்கைகளைக் காட்டி பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியுள்ளனர்.


Next Story