உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 17 Aug 2018 10:30 PM GMT (Updated: 17 Aug 2018 10:16 PM GMT)

அமெரிக்காவில் வாஷிங்டன் வீதிகள் வழியாக ராணுவ அணிவகுப்பு நடத்த ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.


* ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க ஆசைப்பட்ட ஆஸ்திரேலிய பள்ளி மாணவன் ஒருவன், அந்த கம்ப்யூட்டர் நிறுவன நெட்வொர்க்கில் சட்டவிரோதமாக புகுந்து பைல்களை பதிவிறக்கம் செய்து விட்டதாக புகார் எழுந்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

* அமெரிக்காவில் வாஷிங்டன் வீதிகள் வழியாக ராணுவ அணிவகுப்பு நடத்த ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் அந்த அணிவகுப்பு இப்போது ஓராண்டு காலம் தள்ளிப்போய் இருக்கிறது. பிரான்சில் இப்படி ஒரு அணி வகுப்பை பார்வையிட்டு, அதனினும் சிறப்பாக அமெரிக்க அணிவகுப்பு நடைபெற வேண்டும் என்று டிரம்ப் விருப்பம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் டியூஷன் மையம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 48 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்து உள்ளது.

* ஈரான் நாட்டுக்கான சிறப்பு பிரதிநிதியாக பிரையன் ஹூக் என்பவரை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அறிவித்து உள்ளார்.

* உள்நாட்டுப்போரால் சிதைந்து போன சிரியாவை முன்னேற்றும் நோக்கத்தில் அந்த நாட்டுக்கு 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.680 கோடி) நிதியை சவுதி அரேபியா வழங்குவதாக அறிவித்து உள்ளது. இதை அமெரிக்கா வரவேற்று இருக்கிறது.

Next Story