உலக செய்திகள்

ஒரு பெண்ணின் மரண அனுபவம் ’மரணம் அமைதியானது பயப்பட வேண்டாம்’ + "||" + A woman's death experience 'Death is peaceful Do not afraid'

ஒரு பெண்ணின் மரண அனுபவம் ’மரணம் அமைதியானது பயப்பட வேண்டாம்’

ஒரு பெண்ணின் மரண அனுபவம் ’மரணம் அமைதியானது பயப்பட வேண்டாம்’
மூளை அறுவை சிகிச்சையின்போது சில கணங்கள் ‘உயிரிழந்த’ ஒரு பெண், தான் இறந்தபோது எப்படி உணர்ந்தார் என்பதை இங்கிலாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விளக்கியுள்ளார்.
ஹாங்காங்கில் பிறந்து தற்போது லண்டனில் வசிக்கும் மிச்சைலி எல்மேன்  (25), தான் பதினொரு வயதாக இருக்கும்போது தனக்கு செய்யப்பட்ட மூளை அறுவை சிகிச்சை ஒன்றின்போது சில கணங்கள் தன் உயிர் உடலை விட்டுப் பிரிந்ததாகத் தெரிவித்துள்ளார். தான் கட்டிலில் படுத்திருந்தாலும் இறந்த உடன் கட்டிலை விட்டு சில அடிகள் உயரத்தில் மிதந்ததாக தெரிவிக்கும் மிச்சைலி  அந்த கணத்தை எண்ணிப்பார்க்கும்போது அது அமைதியளிக்கும் ஒரு தருணமாக இருந்தது என்கிறார். சாவைப் பார்த்து பயப்படுபவர்களை தைரியப்படுத்தும் மிச்சைலி , மரணம் அமைதியானது அதனால் பயப்பட வேண்டாம் என்கிறார்.

வாழ்க்கையின் முதல் 20 ஆண்டுகளுக்குள்ளாகவே 15 அறுவை சிகிச்சைகளை தனது உடலில் செய்துள்ள மிச்சைலி தனது 11ஆம் வயதில் மூளை அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்படும்போது இந்த சம்பவம் நடந்தது என்கிறார்.எனக்கு அது ஐந்து நிமிடங்கள் போல தெரிந்தாலும், உண்மையில் ஐந்து நொடிகள்தான் அந்த நிலையை அனுபவித்தேன்.

இது குறித்து பல ஆண்டுகள் நான் பேசவில்லை, ஏனென்றால் அது எனக்கு பைத்தியக்காரத்தனம் போல் இருந்தது என்கிறார் மிச்சைலி .அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட தழும்புகளால் தனது உடலைக் குறித்து ஏற்பட்ட வெட்கம் காரணமாக தன்னை எப்போதும் மறைத்துக் கொண்டே வாழ்ந்த மிச்சைலி , இப்போதுதான் தைரியமாக வெளி உலகுக்கு தன்னை காட்டத் தொடங்கியுள்ளதோடு, தன் போல் வெட்கத்துடன் வாழ்வோருக்கு ஊக்கமளிக்கவும் தொடங்கியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. விண்கல்லை ஆராய அனுப்பட்ட ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பியது
ஜப்பானின் ஹயமியூசா-2 விண்கலம் ரயூகு விண்கல்லை ஆராய அனுப்பட்ட ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது.
2. வயிற்றுப்பகுதி முழுவதுமாக அகற்றப்படவுள்ளதால் கடைசியாக மனைவி கையால் பிரியாணி
வாலிபர் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவரது வயிற்றுப்பகுதி முழுவதுமாக அகற்றப்படவுள்ளதால் அவர் கடைசியாக தனது மனைவி சமைத்துகொடுத்த சிக்கன் பிரியாணியை சாப்பிட்டுள்ளார்.
3. கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய ஜோடிக்கு தண்டனை
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய ஜோடிக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது
4. இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் தற்கொலை
பிரான்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் ஒருவர், தேவாலயத்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. நைஜிரியாவில் கடனை அடைக்க சிறுமிகளை திருமணத்திற்கு விற்கும் வழக்கம்
நைஜிரியாவில் கடனை அடைக்க சிறுமிகளை திருமணத்திற்கு விற்கும் வழக்கம் நீண்டகாலமாக இருந்து வருகிறது.