பள்ளிகளில் காஃபி அருந்த தென்கொரியாவில் தடை


பள்ளிகளில் காஃபி அருந்த தென்கொரியாவில் தடை
x
தினத்தந்தி 1 Sep 2018 6:49 AM GMT (Updated: 1 Sep 2018 6:49 AM GMT)

பள்ளிகளில் காஃபி அருந்த தென்கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தென்கொரிய பள்ளிகளில் காஃபி விற்பனைக்கு அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. தென்கொரியாவில் ஏற்கனவே, அதிக அளவு காஃபைன் கொண்ட காஃபி விற்பனை செய்யப்படுவதற்கு ஏற்கனவே கடந்த 2013-ஆம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது. தானியங்கி இயந்திரங்களில் ஆசிரியர் பயன்பாட்டுக்காக அந்த வகை  காஃபி கிடைத்தது. 

எனினும், அதனை மாணவர்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர். எனவே, மாணவர்களுக்கு அதிக காபைன் கொண்ட காஃபி கிடைப்பதற்கான வாய்ப்பை தவிர்ப்பதற்காக அடுத்த மாதம் 14- ஆம் தேதி முதல் அந்த வகை காபியை பள்ளிகளில் விற்பனை செய்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story