குளத்தில் விழுந்த பந்தை கரை சேர்த்து நாய்க்கு உதவிய மீன்கள்


குளத்தில் விழுந்த பந்தை கரை சேர்த்து நாய்க்கு உதவிய மீன்கள்
x
தினத்தந்தி 2 Sep 2018 8:11 AM GMT (Updated: 2 Sep 2018 8:11 AM GMT)

உரிமையாளருடன் நாய் ஒன்று விளையாடி கொண்டிருந்தபொழுது குளத்தில் விழுந்த பந்தை சில மீன்கள் கரையில் சேர்த்து உதவி செய்து விட்டு சென்றுள்ளது.

உரிமையாளர் ஒருவர் பூங்கா ஒன்றில் தனது வளர்ப்பு பிராணியான நாயுடன் பந்து வைத்து விளையாடி கொண்டு இருந்துள்ளார்.  இந்த நிலையில் பூங்காவை ஒட்டிய பகுதியில் அமைந்த வேலியை அடுத்து குளம் ஒன்று அமைந்துள்ளது.

இந்த குளத்திற்குள் இவர்கள் விளையாடிய பந்து விழுந்து விட்டது.  பொதுவாக குளத்திற்குள் பந்து விழுந்து விட்டால் அதனை தேடி கண்டுபிடித்து எடுப்பது எளிதல்ல.  இதனால் என்ன செய்வது என்று உரிமையாளரும், நாயும் கரையில் நின்றுள்ளனர்.  பின்னர் திரும்பி சென்று விடலாம் என நினைத்திருந்த நிலையில் ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த குளத்தில் இருந்த சில மீன்கள் ஆர்வமுடன் தங்களது மூக்கால் பந்தை தள்ளி, தள்ளி கரைக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டு வேகமுடன் நீருக்குள் சென்று விட்டது.  கரை வந்து சேர்ந்த பந்தை நாயின் உரிமையாளர் எடுத்து செல்கிறார்.  தக்க சமயத்தில் நண்பர்களாக செயல்பட்டு குளத்தில் இருந்து பந்தை மீட்டு கரைக்கு சேர்த்துள்ளன புத்திசாலியான மீன்கள்.

https://zodab.com/wp-content/uploads/2018/09/i-thought-i-d-lost-my-dog-s-ball-in-a-pond-but-then-some-fish-brought-it-back.mp4




Next Story