இந்திய பாட்டிற்கு உதட்டசைத்த பாகிஸ்தான் விமானப்படை பெண் ஊழியர்; வைரலான வீடியோ


இந்திய பாட்டிற்கு உதட்டசைத்த பாகிஸ்தான் விமானப்படை பெண் ஊழியர்; வைரலான வீடியோ
x
தினத்தந்தி 4 Sep 2018 6:21 AM GMT (Updated: 4 Sep 2018 6:21 AM GMT)

இந்திய பாட்டிற்கு உதட்டசைத்த பாகிஸ்தான் விமானப்படை பெண் ஊழியர் வீடியோ வைரலானது. இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

லாகூர்

பாகிஸ்தானின் விமானப் பாதுகாப்புப் படையில் பணி புரிந்து வரும் இளம் பெண் ஒருவர்   அந்நாட்டின் கொடியுடன்  தொப்பி அணிந்து இந்திய பாட்டுக்கு உதட்டை அசைத்து உள்ளார். இந்த வீடியோ வலைதளத்தில்  வைரலாகி உள்ளது.இதனை தொடர்ந்து  அவர் மீது நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது. மேலும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

விமானப் பாதுகாப்புப் படை (ASF) நடத்தை விதிகளை மீறியதற்காக 25 வயதான அந்த பெண் ஊழியரின் சேவையில் இரண்டு ஆண்டு சலுகைகள் குறைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில்  இது போல் எந்தவொரு மீறல்களுடனும் சம்பந்தப்பட்டிருந்தால், கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அவரை எச்சரித்து உள்ளனர். மேலும் விமானப் பாதுகாப்புப் படை நிர்வாகம் அதன் ஊழியர்கள் சமூக ஊடகங்களில் எந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கையிலும் ஈடுபடாமலிருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

அந்த பெண்  லாகூரில் இருந்து  100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சியால்கோட் விமான நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பணியாற்றி வருகிறார்.

கடந்த மாதம், நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து நிறுவனம் (PIA) விமானத்தில் நடனமாடிய  ஒரு  பெண்ணின் வீடியோ வைரலானது, அதில் பாகிஸ்தானியக் கொடியைப் போர்த்தியபடி, ஈவா ஜு பெக் தனது பிரபலமான கிக்கி சவாலை தனது தாய்மொழியில் செய்தார். நாட்டில் உள்ள ஊழல் தடுப்பு அமைப்பான தேசிய பொறுப்புக் கழகம், இந்த விஷயத்தில் விசாரணை நடத்தியது.

Next Story