உலக செய்திகள்

வீடியோ கேம் விளையாடுவதைத் தடுத்த தாயை தாக்கி கொலை செய்ய முயற்சித்த சிறுவன் + "||" + Attacked the mother who stopped playing video game boy who tried to kill

வீடியோ கேம் விளையாடுவதைத் தடுத்த தாயை தாக்கி கொலை செய்ய முயற்சித்த சிறுவன்

வீடியோ கேம் விளையாடுவதைத் தடுத்த தாயை தாக்கி கொலை செய்ய முயற்சித்த சிறுவன்
ஆஸ்திரேலியாவில் 14 வயது சிறுவன், வீடியோ கேம் விளையாடுவதைத் தடுத்த தாயை தலையில் பலமாக தாக்கி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோகன் (14) என்ற சிறுவனுக்கு பிளே ஸ்டேஷன் வீடியோ கேம்ஸ் இரவு முழுவதும் விளையாடி வந்துள்ளான்.

கேமின் சுவாரஸ்யத்தாலும், பரபரப்பாலும் உள்ளிழுக்கப்பட்ட லோகன் இந்த கேமிற்கு அடிமையாகவே மாறியுள்ளார். 

ஒரு கட்டத்தில் கேம்ஸ் விளையாடக்கூடாது என லோகனின் தாய் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகன், அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

அவரது தாய் போலீசாரை  அழைத்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரை காப்பாற்றினர்.

இது குறித்து பேசிய லோகனின் தாய் வீடியோ கேம்ஸை வாங்கிக் கொடுக்கும் வரை வெளியில் சென்று விளையாடிக்கொண்டிருந்த லோகன், அதன் பிறகு முழுவதுமாக மாறிவிட்டான். 

உணவு உட்கொள்ளவும், கழிவறைக்கு செல்லும் நேரத்தைத் தவிர முழுக்க முழுக்க வீடியோ கேமில் மூழ்கியிருந்தான் என்று தெரிவித்தார். லோகன் தாக்கியதில், அவரது தாய்க்கு தலையில் உள்காயம் ஏற்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. திடீரென்று பறந்து சென்ற, பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள்
திடீரென்று பறந்து சென்ற பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ் விமானிகள்.
2. அமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை -பிரான்ஸ் கண்டனம்
என்ன பேசுவது என்று கூட தெரியாமல் பேசும் அமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை என பிரான்ஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.
3. டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்த ஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸின் வழக்கறிஞர் கைது
ஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸின் வழக்கறிஞர் மைக்கேல் குடும்ப வன்முறையில் ஈடுபட்டார் என்று கைது செய்யப்பட்டுள்ளார்.
4. ஏர் இந்திய விமானத்தில், பைலட் மீது எச்சில் துப்பி ரகளையில் ஈடுபட்ட பெண்
ஏர் இந்திய விமானத்தில் விமான பைலட் மீது எச்சில் துப்பி கெட்டவார்த்தைகளால் திட்டி வெளிநாட்டு பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.
5. சுமார் 26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட கடல் புழு ஆய்வாளர்கள் அதிர்ச்சி
நியூசிலாந்தின் கடல் பகுதியில், சுமார் 26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட கடல் புழு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.