உலக செய்திகள்

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் கைது + "||" + IS terrorist organization supporter arrested

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் கைது

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் கைது
ஈராக்கில் மொசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.

மொசூல்,

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியாமல் உள்நாட்டுப் படையினரும், அமெரிக்க கூட்டுப்படையினரும் திணறி வருகின்றனர்.

மொசூல் நகரின் வடமேற்குப் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி மற்றும் பொருட்கள் வழங்கி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். பாடுஷ் மலைப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினருக்கு உணவுப்பொருட்களை ஒரு வாகனத்தில் ஏற்றிச்சென்று வழங்க இருந்தபோது, அவரை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர் கைபேசியில் பேசிச்சென்றதை வைத்து அவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் என்பதை பாதுகாப்பு படையினர் புரிந்து, பின்தொடர்ந்து சென்று சுற்றி வளைத்து கைது செய்து உள்ளனர்.

அவரிடம் இருந்து 1300 அமெரிக்க டாலரை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

இதற்கு மத்தியில் மொசூல் நகரின் மேற்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் 8 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்து உள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது.