உலக செய்திகள்

உலகைச் சுற்றி... + "||" + Around the world ...

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
* அமெரிக்காவில் அலபாமா, மிசிசிபி எல்லையில் ‘கார்டன்’ புயல் காரணமாக பலத்த மழை பெய்து உள்ளது.
* சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் சிரிய படை வீரர்கள் 3 பேர் பலி ஆகினர். அதே நேரத்தில் சிரியா அரசு செய்தி நிறுவனம் சனா, இஸ்ரேலின் ஏவுகணைகளை சிரியாவின் வான்பாதுகாப்பு சாதனங்கள் வழிமறித்து அழித்து உள்ளதாக கூறுகிறது.


* அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஜனாதிபதி டிரம்பால் தேர்வு செய்யப்பட்டு உள்ளவர், பிரெட் கவனாப். இவருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் தான் கைது செய்யப்பட்டு உள்ளதாக ஹாலிவுட் நடிகை பைபர் பெரபோ டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

* ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆலோசகராக ஜல்மே கலீல்ஜாத் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் அங்கு அமெரிக்க தூதராக பணியாற்றியவர் ஆவார்.

* துருக்கியில் அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பிரன்சன் சிறை வைக்கப்பட்டு உள்ள விவகாரத்தில், அமெரிக்காவின் சட்ட விரோதமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது என அதிபர் எர்டோகன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பான கேள்விகளுக்கு ஜனாதிபதி டிரம்பின் பதில்கள் எழுத்து வடிவமாக ஏற்றுக்கொள்ளப்படும் என சிறப்பு விசாரணை நடத்தும் ராபர்ட் முல்லர் அறிவித்து இருக்கிறார்.