உலக செய்திகள்

உலகைச் சுற்றி... + "||" + Around the world ...

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
* இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார்.
* கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதை வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் மீண்டும் உறுதி செய்து உள்ளார். இதையடுத்து அந்த நாட்டுடன் வரும் 18–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை உச்சி மாநாடு நடத்திப் பேசப்போவதாக தென் கொரியா அறிவித்து உள்ளது.

* அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிசை மாற்றுவதற்கு ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

* கேரள வெள்ளம், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண காட்டுத்தீ ஆகியவற்றை சுட்டிக்காட்டி பருவநிலை மாற்றம் மிக வேகமாக நடந்து கொண்டு இருப்பதாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறி உள்ளார்.

* அமெரிக்க  நலனை  சீரழிக்கிற விதத்தில் ஜனாதிபதி டிரம்ப் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார் என் று ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் தன்னை யார் என அடையாளம் காட்டாத ஒருவர் கட்டுரை எழுதி உள்ளார். ஆனால் அவரை தைரியமில்லாத கோழை என்றும், அவர் செய்திருப்பது தேசத்துரோகம் என்றும் டிரம்ப் சாடி உள்ளார்.

* பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரானின் செல்வாக்கு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்து உள்ளது. அங்கு நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் அவருக்கு ஆதரவாக 27 சதவீதம் பேர் மட்டும்தான் கருத்து தெரிவித்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உலகைச் சுற்றி...
* தான்சானியா படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. மேலும் விபத்துக்குள்ளான படகின் சிதைவுகளில் இருந்து ஆண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
2. உலகைச் சுற்றி...
* சீனாவில் கேடு விளைவிக்கும் 4 ஆயிரம் இணைய தளங்களை மூடி அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
3. உலகைச் சுற்றி...
* மெக்சிகோவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மானுவல் லோபஸ் ஒபராடோ சமீபத்தில் சாதாரண பயணிகள் விமானம் ஒன்றில் பயணம் செய்தார்.
4. உலகைச் சுற்றி...
* 2017–ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீதம், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 ஆசிய நாடுகளில் தான் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
5. உலகைச் சுற்றி...
* ஜப்பானில் 26 ஆண்டுகளில் முதன்முதலாக இப்போது ஒருவரை பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.