நகம் கடிக்கும் பழக்கம்: கட்டை விரலை இழந்த மாணவி


நகம் கடிக்கும் பழக்கம்:  கட்டை விரலை இழந்த மாணவி
x
தினத்தந்தி 7 Sep 2018 9:13 AM GMT (Updated: 7 Sep 2018 9:13 AM GMT)

மாணவி ஒருவர் தொடர்ந்து நகம் கடிக்கும் பழக்கத்துக்கு ஆளான காரணத்தால் தனது கட்டை விரலை இழந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து கவுண்டி துர்ஹாம் பகுதியை சேர்ந்த விதோர்ன் என்ற 20 வயதான கல்லூரி மாணவிக்கு அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

சிறு வயது முதலே இந்த பழக்கம் இருக்கிறது என கூறியுள்ள விதோர்ன், இதனால் தனது விரலை இழந்ததோடு புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

நகம் கடித்ததன் காரணமாக வலது கையில் உள்ள கட்டை விரல் நான்காண்டுகளுக்கு முன் கறுப்பாக மாற தொடங்கியது. கையுறகள் கொண்டு மூடி மறைத்து வந்த அவர், வலி தாங்க முடியாமல் சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவரது விரலை பரிசோதனை செய்த பின்னர் தான் அக்ரல் லெண்டிஜினஸ் சப்லுகுஜுவல் மெலனோமாஎன்ற அரிய வகை புற்றுநோயால் விதோர்ன் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதன் பின்னர், நான்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது கட்டை விரல் அகற்றப்பட்டது. இருப்பினும் புற்றுநோயை குணப்படுத்த இயலவில்லை. தற்போது மாணவி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story