உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வாலிபர் பலி; 4 பேர் படுகாயம் + "||" + Gunfire in the United States Kills youth 4 people were injured

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வாலிபர் பலி; 4 பேர் படுகாயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வாலிபர் பலி; 4 பேர் படுகாயம்
அமெரிக்காவில் அடிக்கடி நடந்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், அங்கு உள்ள மக்கள் இடையே மிகுந்த பதற்றத்தையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

வாஷிங்டன்,

அலபாமா மாகாணம், ஆபர்ண் பல்கலைக்கழகத்தின் அருகே உள்ள ஒரு உணவு விடுதியில் நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு நுழைந்த ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். அதைத் தொடர்ந்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

இதற்கு இடையே வாலிபர் ஒருவர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலி ஆனார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த 4 பேரையும் போலீசார் மீட்டனர். அவர்களில் 3 பேர் கிழக்கு அலபாமா ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். ஒருவரின் உடல் நிலை மோசமாக உள்ளதால் அவர் பீட்மாண்ட் கொலம்பஸ் பிராந்திய ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார், அதன் பின்னணி என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் டெம்போ– லாரி மோதல்; டிரைவர் படுகாயம்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் டெம்போ–லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார். அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குவதால் சம்பவத்தப்பட்ட ஆய்வு செய்து விபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
2. பெருந்துறை அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி கணவன்– மனைவி சாவு
பெருந்துறை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி கணவன் மற்றும் மனைவி பரிதாபமாக இறந்தனர். அவர்களுடைய மகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா பேட்டி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
4. மோட்டார்சைக்கிள்–லாரி மோதல்: தறித்தொழிலாளி பரிதாப சாவு; நண்பர் படுகாயம்
மோட்டார்சைக்கிள்–லாரி மோதிக்கொண்ட விபத்தில் தறித்தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
5. புழல் அருகே, குடும்பத் தகராறில் மனைவி தீக்குளிப்பு; காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம்
புழல் அருகே குடும்பத் தகராறில் மனைவி தீக்குளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம் அடைந்தார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...