உலகைச்சுற்றி....


உலகைச்சுற்றி....
x
தினத்தந்தி 10 Sep 2018 10:45 PM GMT (Updated: 10 Sep 2018 9:13 PM GMT)

ஜப்பானில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஐ எட்டியது.


* ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள நகரமான பெர்த்தில் ஒரு வீட்டில் வசித்து வந்த ஒரு பெண், அவருடைய 3 பெண் குழந்தைகள் மற்றும் அந்த பெண்ணின் தாயார் என 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகளை செய்த நபர் தாமாக போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார். இந்த கொலைகளுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* கம்போடியாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான கெம் சோகா, தேசத்துரோக குற்றச்சாட்டில் தண்டனை பெற்று ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தார். இந்த நிலையில் அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு அந்நாட்டு கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. எனினும் அவர் தொடர்ந்து வீட்டு காவலில் வைக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஜப்பானில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஐ எட்டியது. அங்கு இன்னும் சில பகுதிகளில் மின் இணைப்பு கிடைக்கப்பெறாததால் புகழ்பெற்ற டொயோட்டா நிறுவனத்தில் வாகன உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

* நேபாளத்தின் புதிய ராணுவ தளபதியாக பூர்ண சந்திரா தாபா நேற்றுமுன்தினம் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

* துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ராணுவ புரட்சிக்கு அமெரிக்கா வாழ் மதகுரு ஒருவர் மூளையாக இருந்ததாக அந்நாட்டின் அதிபர் தையீப் எர்டோகன் நம்புகிறார். இந்த நிலையில் அந்த மதகுருவுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் 48 ராணுவவீரர்கள் உள்பட 56 பேரை துருக்கி அதிகாரிகள் கைது செய்தனர்.

* கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கர் நாட்டின் தலைநகர் ஆண்டனநாரிவோவில் உள்ள கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிர் இழந்தார். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

Next Story