உலக செய்திகள்

சவுதி இளவரசி தங்கியிருந்த ஓட்டலில் கோடி கணக்கிலான நகைகள் கொள்ளை + "||" + Saudi royal's jewels worth Dh3.4 million stolen from hotel room

சவுதி இளவரசி தங்கியிருந்த ஓட்டலில் கோடி கணக்கிலான நகைகள் கொள்ளை

சவுதி இளவரசி தங்கியிருந்த ஓட்டலில் கோடி கணக்கிலான நகைகள் கொள்ளை
பிரான்சில் சவுதி இளவரசி தங்கியிருந்த ஓட்டலில் அவரின் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரீஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர விடுதியான ரிட்ஸ் ஓட்டலில், உள்ள அறை ஒன்றில் சவுதி இளவரசி தங்கியுள்ளார். ஆனால் அவரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.

அப்போது அவரின் சுமார் 800,000  யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ7 கோடி) மதிப்பு கொண்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை பிற்பகலில் நடந்துள்ளது எனவும் இது குறித்து பிரான்சின் ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றம் சார்ந்த குழு  விசாரணை நடத்தி வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள்  தெரிவித்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் இதே போன்று இந்த ஓட்டலில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கொள்ளை கும்பல் ஒன்று, அங்கு ஜுவல்லரி ஷாப்பில் இருந்த சுமார் 4 மில்லியன் யூரோ மதிப்பு கொண்ட நகைகளை திருடிச் சென்றனர். அப்போது அவர்கள் தப்பிப்பதற்காக ஓடிய போது, திருடப்பட்ட நகைகள் சில அங்கு சிதறி விழுந்தன. அதை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் விடுதியில் தீ; 2 பேர் உடல் கருகி சாவு
பிரான்சில் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் உடல் கருகி பலியாயினர்.
2. பல்வேறு வசதிகள் கொண்ட சொகுசு வேனில் நாடுகளை சுற்றும் பிரான்ஸ் தம்பதி ராமேசுவரம் வந்தனர்
பல்வேறு வசதிகளை கொண்ட சொகுசு வேனில் நாடுகளை சுற்றும் பிரான்ஸ் நாட்டு தம்பதி நேற்று ராமேசுவரம் வந்தனர்.
3. பிரான்சில் மீண்டும் வலுப்பெற்றது மஞ்சள் அங்கி போராட்டம் - பல இடங்களில் வன்முறை வெடித்தது
பிரான்சில் மஞ்சள் அங்கி போராட்டம் மீண்டும் வலுப்பெற்றது. பல இடங்களில் வன்முறை வெடித்தது.
4. பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ராட்டினத்தில் சிக்கிய 8 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ராட்டினத்தில் சிக்கிய 8 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
5. பிரான்ஸ் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஸ்டிராஸ்பர்க் நகர் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரை கொன்ற ஷெரீப் தங்கள் இயக்கத்தின் போராளி என ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தெரிவித்தது