மனித உடல்கள் அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு


மனித உடல்கள் அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 11 Sep 2018 11:17 AM GMT (Updated: 11 Sep 2018 11:17 AM GMT)

பெர்லினில் செயல்பட்டு வந்த பதப்படுத்தப்பட்டு வந்த மனித உடல்கள் அருங்காட்சியகத்தை மீண்டும் திறப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

உடல் உலகங்கள் என்ற அருங்காட்சியகம் மக்களின் பார்வைக்காக பெர்லினில் 2015 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது, இந்த அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் வைக்கப்பட்டன.

மனித உடல்கள் பார்ப்பதற்கு அச்சுறுத்தும் வகையிலும் அதன் உடலினுள் பிளாஸ்டிக் வைக்கப்பட்டு பார்ப்பதற்கு சீட்டு கட்டு விளையாட்டு விளையாடுவது போன்று ஒரு மனிதனின் உடல் தோற்றத்தை ஒழுங்காக பதப்படுத்தி வைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, இந்த அருங்காட்சிகத்தை மூட வேண்டும் என கூறப்பட்டது.



அதனைத்தொடர்ந்து, இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டது. இந்நிலையில் இதன் உரிமையாளர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், உடலினுள் போதிய திரவங்கள் வைக்கப்பட்டு முறையாக மனித உடல்களை பார்வைக்கு வைக்கலாம் என்ற அறிவுறுத்தலோடு அருங்காட்சியத்தை மீண்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது

Next Story