உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று தனது மந்திரிசபையை விரிவுபடுத்தினார்.

* நைஜீரியாவில் ‘கியாஸ்’ டேங்கர் லாரியில் இருந்து கியாசை பெட்ரோல் நிலையம் ஒன்றுக்கு மாற்றும்போது, எதிர்பாராதவிதமாக டேங்கர் வெடித்து விட்டது. இந்த கோர விபத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

* ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர தலீபான் பயங்கரவாத அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஒரு குழுவை அனுப்பி வைக்க தயார் ஆகி வருகிறது.

* உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போர் முக்கியத்துவம் வாய்ந்தது, இதற்கு பாகிஸ்தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று விரும்புகிறோம் என அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று தனது மந்திரிசபையை விரிவுபடுத்தினார். தலா 3 கேபினட் மந்திரிகளும், ராஜாங்க மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். இஸ்லாமாபாத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் அவர்களுக்கு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

* நேபாளத்தில் மர்ம நோய்க்கு 3 பேர் பலியாகினர். 15 நாளில் 400-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் பாதித்து சிகிச்சை பெறுகின்றனர்.