உலக செய்திகள்

மனைவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நவாஸ் ஷெரீப்புக்கு பரோல் + "||" + Sharif his daughter and son-in-law granted parole reached Lahore to attend Kulsoom's funeral

மனைவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நவாஸ் ஷெரீப்புக்கு பரோல்

மனைவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நவாஸ் ஷெரீப்புக்கு பரோல்
மனைவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இஸ்லமாபாத்,

‘பனாமா கேட்’ ஊழலில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். 2014-ம் ஆண்டிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் அவருடைய உடல்நிலை கடந்த சிலநாட்களாக மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 

இந்நிலையில், தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் நவாஸ் ஷரிப்.அவரது பரோல் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு 12 மணி நேர பரோல் கொடுத்து உத்தரவிட்டது. இதையடுத்து, ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷரிப் மற்றும் மரியம் நவாஸ், அவரது கணவர் ஆகியோர் லாகூரை வந்தடைந்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. நவாஸ் ஷெரீப் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது: மகள் மர்யம் நவாஸ்
நவாஸ் ஷெரீப் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவரைக்காண சிறைநிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும் மர்யம் நவாஸ் தெரிவித்துள்ளார்.
2. சிறைச்சாலையில் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை அனுமதிக்க மறுப்பு
சிறைச்சாலையில் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை அனுமதிக்க பஞ்சாப் மாகாண அரசு நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
3. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து நவாஸ் ஷெரீப் மேல்முறையீடு
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மேல்முறையீடு செய்துள்ளார்.
4. ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை நவாஸ் ஷெரீப் வேறு சிறைக்கு மாற்றம்
லண்டனில் முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
5. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் ஜாமீன் விடுதலை ரத்தா?
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஜாமீன் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு அடுத்த மாதம் விசாரிக்கிறது.