உலக செய்திகள்

12 பணிப்பெண்களுடன் மகளை படிக்க அனுப்பும் பணக்கார இந்திய தந்தை + "||" + Rich Indian dad hires 12 servants for daughter in UK college

12 பணிப்பெண்களுடன் மகளை படிக்க அனுப்பும் பணக்கார இந்திய தந்தை

12 பணிப்பெண்களுடன் மகளை படிக்க அனுப்பும் பணக்கார இந்திய தந்தை
ஆண்டுக்கு தலா ரூ 28 லட்சம் சம்பளத்தில் 12 பணிப்பெண்களை நியமித்து மகளை படிக்க அனுப்புகிறார் பணக்கார இந்திய தந்தை ஒருவர்.
லண்டன்,

அப்பாக்கள் எல்லா இடங்களிலும் தங்கள் மகள்களைப் பற்றிக் கூறுகிறார்கள்.  ஆனால் இந்திய அப்பாக்கள் மகள்கள் பற்றிக் கவலைப்படுகிறார்கள். அவர் இந்தியாவில் இருந்தால், பெரும்பாலும் பாதுகாப்பு பற்றி. வெளிநாட்டில் இருந்தால் அவளது நல்வாழ்வு பற்றி.

இந்தியாவை சேர்ந்த பணக்கார தந்தை ஒருவர் ஸ்காட்டிஷ் மலைப்பகுதியில் பல மைல்கள் தொலைவில் இருக்கும் போது கூட அவரது மகள் 'வீட்டில்' இருப்பதை  போன்று இருப்பதை உறுதி செய்வதற்காக  பல கோடி செலவழித்து அதற்குறிய வேலையாட்களை தேடி வருகிறார்.

இது குறித்து தி சன்  வெளியிட்டு உள்ள விளம்பர செய்தியில்;

கோடீசுவரரின் மகள் ஸ்காட்லாந்தில் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்திருக்கின்றார். கல்லூரியின் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க  அவருக்கு உதவி செய்ய 12 ஊழியர்கள்  வேண்டும். ஒரு மாளிகையில் குடியிருக்கவும், வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மகளுக்கு வழங்க வேண்டும். இதற்கு  விருப்பம் உள்ளவர்கள்  இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என  பெற்றோர்கள் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.  இதற்கு ஆண்டு சம்பளம் 30 ஆயிரம் பவுண்டுகள் என கூறப்பட்டு உள்ளது. இது இந்திய ரூபாயில் ரூ.28.5 லட்சமாகும். ( இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நான்கு ஆண்டுகளுக்கு பல்கலைக்கழக கட்டணத்தை  இதைவிடக் குறைவாகக் கொடுக்கிறார்கள்)குடும்பம் மிகவும் முறையானது, அனுபவம் வாய்ந்த ஊழியர்களை விரும்புகிறோம்.

ஒரு சமையல்காரர், ஒரு பெண் பணிப்பெண், ஒரு பணியாளர், ஒரு ஓட்டுனர், ஒரு தோட்டக்காரர், ஒரு வீட்டு மேலாளர், மூன்று வீட்டு காவலாளிகள் மற்றும் மூன்று காலாட்பணிகள் ஆகிய பதவிகளுக்கு  விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஸ்காட்லாந்தில் செயிண்ட் ஆண்ட்ரூஸ் படிக்கும் பெண் வாழ ஒரு மாளிகையை வாங்கி விட்டார். ஏனெனில் அவர் தட்டுத்தடுப்பு அறைகள் மற்றும் அரங்கங்களில் வசிக்க விரும்பும் பெண் ஆவார்.

ஆசிரியரின் தேர்வுகள்...