உலக செய்திகள்

பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட்டில் 2 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்படும்; தலைமை நீதிபதி + "||" + Pakistan SC to hire two transgenders: CJ

பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட்டில் 2 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்படும்; தலைமை நீதிபதி

பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட்டில் 2 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்படும்; தலைமை நீதிபதி
பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட்டில் 2 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்பட உள்ளது என தலைமை நீதிபதி கூறினார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாடு கடந்த 2009ம் ஆண்டு திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என சட்டப்பூர்வ முறையில் அங்கீகரித்தது.  அவர்கள் அடையாள அட்டைகள் பெறவும் அனுமதி வழங்கியது.  கடந்த வருடம் முதன்முறையாக திருநங்கைகள் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் எடுத்து கொள்ளப்பட்டனர்.

அந்நாட்டில் பல்வேறு ஆய்வுகளின்படி குறைந்தது 5 லட்சம் திருநங்கைகள் உள்ளனர் என தெரிய வந்துள்ளது.  அந்நாடு பிற நாடுகளை விட, திருநங்கைகளுக்கு சிறந்த உரிமைகள் கிடைக்க செய்வதற்கான சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சாகிப் நிசார் கூறும்பொழுது, இரண்டு திருநங்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டில் பணி வழங்கப்படும் என கூறியுள்ளார்.

அவர், திருநங்கைகளை சமூக வாழ்விற்கு கொண்டு வர நீதிமன்றம் விரும்புகிறது.  அவர்களின் பிரச்னைகளை தீர்க்க விரும்புகிறது.  நம்முடைய சமூகத்தில் திருநங்கைகள் கேலிக்கு ஆளாகும் நிலையில் உள்ளனர்.

அவர்ளுக்கான உரிமைகளை நாம் வழங்குவது என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி நாகர்கோவிலில் வக்கீல்கள் பேரணி
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி நாகர்கோவிலில் வக்கீல்கள் பேரணி நடத்தினர்.
2. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு: ரபேல் முறைகேடு விசாரணையை திசைதிருப்ப முயற்சி - காங்கிரஸ் புகார்
ரபேல் முறைகேடு விசாரணையை திசைதிருப்பும் முயற்சியாக, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
3. இடது சாரி ஆர்வலர்களுக்கு விதிக்கப்பட்ட வீட்டுக்காவல் செப்.17 ஆம் தேதி வரை நீட்டிப்பு
மகாராஷ்டிர மாநிலம், பீமா - கோரேகானில் நடந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இடதுசாரி ஆர்வலர்கள் 5 பேரின் வீட்டுக்காவலை, வரும் 17-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4. மாவோயிஸ்டு ஆதரவாளர்களின் வீட்டுக்காவலை செப்.12 வரை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்
மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் என்று கூறப்படும் 5 பேரின் வீட்டுக்காவலை செப்.12 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.
5. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உத்தரவை அவசரமாக மனுவாக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.