உலக செய்திகள்

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9 தொழிலாளர்கள் பலி + "||" + 9 miners killed in coal mine explosion in Pakistan

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9 தொழிலாளர்கள் பலி

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9 தொழிலாளர்கள் பலி
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் மீத்தேன் வாயு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியாகினர்.

பெஷாவர்,

பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் அகோர்வால் என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது.  இங்கு சுரங்க தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

இந்நிலையில், மீத்தேன் வாயு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.  3 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் ஒவ்வொரு வருடமும் 100 முதல் 200 தொழிலாளர்கள் பலியாகின்றனர்.  இதற்கு நவீன சுரங்க வசதிகள், பயிற்சி மற்றும் சாதனங்கள் இல்லாதது காரணம் என கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்டில் பலூசிஸ்தானில் சுரங்க விபத்தொன்றில் 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.  இதேபோன்று கடந்த செப்டம்பர் 2ந்தேதி பலூசிஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் மூச்சு திணறி 2 பேர் உயிரிழந்தனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...