உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் | அடுத்த 6 மணி நேரத்தில் கஜா புயல் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் - வானிலை ஆய்வு மையம் | இன்று நடைபெற இருந்த மதுரை காமராஜர் பல்கலை. தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. | நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்களாகும் - மின்துறை அதிகாரிகள் தகவல் | கடலூர் : கீழப்பெரம்பையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது, 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின | தஞ்சை: மல்லிபட்டினத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் சேதம். |

தேசிய செய்திகள்

வயிற்றின் அடி பகுதியில் மறைத்து தங்க கட்டிகளை கடத்தியவர் டெல்லி விமான நிலையத்தில் கைது + "||" + Man smuggling 1 kg gold by hiding it in his rectum arrested at Delhi airport

வயிற்றின் அடி பகுதியில் மறைத்து தங்க கட்டிகளை கடத்தியவர் டெல்லி விமான நிலையத்தில் கைது

வயிற்றின் அடி பகுதியில் மறைத்து தங்க கட்டிகளை கடத்தியவர் டெல்லி விமான நிலையத்தில் கைது
வயிற்றின் அடி பகுதியில் மறைத்து 1 கிலோ அளவுள்ள தங்க கட்டிகளை கடத்திய நபர் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்க கட்டிகளை கடத்துவது வாடிக்கையாகி விட்டது.  துபாயில் இருந்து வந்த விமானத்தில் 24 வயது பயணி ஒருவர் மீது சுங்க துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனை அடுத்து அவரின் உடைமைகளில் விரிவான பரிசோதனை நடத்தப்பட்டது.  அவரிடமும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இதில் 1.04 கிலோ கிராம் எடை கொண்ட 9 தங்க கட்டிகளை அந்த நபர் வயிற்றின் அடி பகுதியில் மறைத்து வைத்து கடத்தியிருந்தது தெரிய வந்தது.

அவரை கைது செய்த அதிகாரிகள் ₹.32 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர்.  மற்றொருவர் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளார்.  அவரிடம் பிரான்ஸ் நாட்டு பாஸ்போர்ட் இருந்தது. 

இவர்களிடம் நடத்திய சோதனையில் 1.5 கிலோ எடை கொண்ட ஒரு தங்க கட்டி மற்றும் 5 தங்க பிஸ்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.  அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. தாராபுரத்தில் சாக்குமூட்டையில் பிணம் மீட்பு: அண்ணியை கொன்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது
தாராபுரத்தில் சாக்குமூட்டையில் பிணம் மீட்கப்பட்ட விவகாரத்தில், அண்ணியை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசியதாக வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பை துண்டித்ததால் தீர்த்துக்கட்டியதாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
2. காரில் கடத்தப்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் மீட்பு; 4 பேர் கைது
பணத்தகராறில் காரில் கடத்தப்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த நிதி நிறுவன அதிபரை காரில் கடத்திய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
3. நிலத்தகராறில் கழுத்தை அறுத்து விவசாயி கொலை: அண்ணன் மகன் கைது
மதுக்கூர் அருகே நில தகராறில் கழுத்தை அறுத்து விவசாயி கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.
4. புதிய பாலம் ஒன்றில் ஆடைகளை களைந்து பொதுமக்கள் முன் நடனம் ஆடிய 4 திருநங்கைகள் கைது
டெல்லியில் புதிய பாலத்தில் ஆடைகளை களைந்து பொதுமக்கள் முன் நடனம் ஆடிய 4 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.