மக்கள் கூட்டத்தில் கார் மோதல், கத்தி குத்து - கொடூர குற்றவாளி கைது


மக்கள் கூட்டத்தில் கார் மோதல், கத்தி குத்து - கொடூர குற்றவாளி கைது
x
தினத்தந்தி 12 Sep 2018 6:15 PM GMT (Updated: 12 Sep 2018 6:07 PM GMT)

சீனாவில் மக்கள் கூட்டத்தில் காரை மோதச்செய்ததுடன் கத்தியால் குத்தி 3 பேரை கொன்ற கொடூர குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

பீஜீங்,

சீனா நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடிய இருந்த பகுதியில் நேற்று ஒரு கார் வேகமாக வந்து மோதியது. இதில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். அப்போது ஆத்திரம் தீராமல் காரில் இருந்து இறங்கிய ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இந்த கொடூர சம்பவத்தில் 3 பேர் அதே இடத்தில் இறந்தனர். 43 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்த போலீசார் அந்த நபரை பிடித்தனர்.

விசாரணையில் அவர் யாங் ஜான்யுன் (வயது 54) என்றும், பல்வேறு குற்றவழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி என்றும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story