உலக செய்திகள்

என்.எஸ்.ஜியில் உறுப்பினராக இந்தியாவுக்கு முழு தகுதி உள்ளது : அமெரிக்கா + "||" + India meets all qualifications to be member of NSG: US

என்.எஸ்.ஜியில் உறுப்பினராக இந்தியாவுக்கு முழு தகுதி உள்ளது : அமெரிக்கா

என்.எஸ்.ஜியில் உறுப்பினராக இந்தியாவுக்கு முழு தகுதி உள்ளது : அமெரிக்கா
என்.எஸ்.ஜியில் உறுப்பினராக இந்தியாவுக்கு முழு தகுதி உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,

அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் தற்போது 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த குழுவில் இடம் பெற இந்தியாவும், பாகிஸ்தானும் விண்ணப்பித்துள்ளன.அணுசக்தி வினியோகக் குழுவில் இடம் பிடிப்பதன் மூலம் இந்தியாவில் அணு மின் உற்பத்தியை மேம்படுத்த முடியும். அது பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் கை கொடுக்கும் என்பதால், அந்த குழுவில் இடம் பெற இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி கடந்த சில மாதங்களாக நாடு, நாடாக சென்று இதற்கு ஆதரவு திரட்டி வந்தார்.

அதன் பயனாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், அர்ஜெண்டினா, தென்கொரியா, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ரஷியா உள்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. என்றாலும் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால் கூட, அதில் புதிய உறுப்பினரை சேர்க்க முடியாது என்பதால் எதிர்ப்பு நாடுகளின் ஆதரவைப் பெற இந்தியா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது. இந்த குழுவில் உள்ள சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் இந்தியாவை சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதை காரணம் காட்டி, இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு காட்டி வருகிறது. 

இந்த நிலையில், அணுசக்தி விநியோக குழுவில் இடம் பெற இந்தியாவுக்கு முழு தகுதி இருப்பதாகவும், சீனாவின் எதிர்ப்பால் இந்தியாவில் இடம் பெற முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், இந்தக்குழுவில் இந்தியா இடம் பெற ஆக்கப்பூர்வமாக வாதாடுவோம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் மும்பையில் இன்று நடக்கிறது
இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
2. தெலுங்கானாவை சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
தெலுங்கானாவை சேர்ந்த கோவர்தன் ரெட்டி என்பவர் அமெரிக்காவில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
3. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு
இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
4. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளார்.
5. சவுதி அரேபிய பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...