உலக செய்திகள்

மாறிவரும் டிஜிட்டல் யாசகம் + "||" + Variable is coming Digital Yasakam

மாறிவரும் டிஜிட்டல் யாசகம்

மாறிவரும் டிஜிட்டல் யாசகம்
உலகம் பணமில்லா பரிவர்த்தனையான, ‘டிஜிட்டல் பரிவர்த்தனை’க்குக் கொஞ்சம், கொஞ்சமாக மாறிவருகிறது. அதனால் கையில் பணமில்லை என்று சொல்லி விடுவதால் யாசகம் கேட்பவர்களின் நிலைமை மோசமாகி விட்டது.
சீன யாசகர்கள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டுபிடித்துவிட்டனர் . ஷான்டோங் மாகாணத்தில் உள்ள ஜினான் நகரில் இருக்கும் யாசகர்கள், டிஜிட்டல் யாசகத்துக்கு மாறிவிட்டனர். கையில் ஒரு பாத்திரம், பிரிண்ட் செய்யப்பட்ட கியூ. ஆர்.கோட், கடன் அட்டைகளைத் தேய்ப்பதற்கான இயந்திரம் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள். பணம் இருப்பவர்களிடம் பணமாகவும், இல்லாதவர்களிடம் கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்யும்படியும் சொல்கிறார்கள். உடனே அவர்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் சென்றுவிடுகிறது.


சீனாவின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், பெய்ஜிங் உட்பட்ட பல நகரங்களில் கியூ.ஆர். கோட் மூலம் யாசகர்கள் அதிக அளவில் வருமானம் பெறுகிறார்கள் என்று சொல்கின்றன. இந்த டிஜிட்டல் யாசகத்தை எல்லா இடங்களிலும் செய்துவிட முடியாது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில்தான் வெற்றிகரமாகச் செய்ய முடியும். இதுபோன்ற இடங்களில் ஒரு யாசகர் மாதத்துக்கு சுமார் 44 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து விடுகிறார். டிஜிட்டல் பரிவர்த்தனையில், அமெரிக்காவை விட 50 மடங்கு அதிகமாக சீனா ஈடுபட்டுவருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.