பாஸ்டனில் கேஸ் பைப்லன் வெடித்து விபத்து-6 பேர் காயம், நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்


பாஸ்டனில் கேஸ் பைப்லன் வெடித்து விபத்து-6 பேர் காயம், நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 14 Sep 2018 2:22 AM GMT (Updated: 14 Sep 2018 2:22 AM GMT)

பாஸ்டனில் கேஸ் பைப்லன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

பாஸ்டன்,

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்து சுமார் 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள லாவ்ரன்ஸ், அண்டோவர் மற்றும் வடக்கு அண்டோவர் ஆகிய பகுதிகளில் உள்ள  எரிவாயு பைப்லைனில் திடீர் விபத்து ஏற்பட்டது. சுமார் 70 இடங்களில் அடுத்தடுத்து வெடி விபத்து ஏற்பட்டது. 

இதனால், விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் விபத்தினால், ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு தீ அணைப்பு குழுவினர் அப்பகுதியில் உள்ளவர்களை கேட்டுக்கொண்டனர். 

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, கேஸ் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள தெருக்கள் இருளில் மூழ்கின. தீ விபத்து ஏற்பட்டு பெரிய அளவில் கரும்புகை வெளியேறும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் ஒளிபரப்பானதை காண முடிந்தது. 

இந்த விபத்தில், 6 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் குற்ற  பின்னணி ஏதும் இருப்பதாக தற்போதைக்கு தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். புகை மண்டலங்களாக காட்சி அளிக்கும் புகைப்படங்களை உள்ளூர்வாசிகள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருப்பதை காண முடிந்தது.


Next Story