உலக செய்திகள்

நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் உடல் லாகூர் வந்தடைந்தது + "||" + PIA flight carrying Begum Kulsoom's body arrives in Lahore

நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் உடல் லாகூர் வந்தடைந்தது

நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் உடல் லாகூர் வந்தடைந்தது
சிகிச்சை பலனின்றி லண்டன் மருத்துவமனையில் உயிரிழந்த நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் ஷெரிப்பின் உடல் லாகூர் கொண்டு வரப்பட்டது.
லாகூர்,

‘பனாமா கேட்’ ஊழலில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். 2014-ம் ஆண்டிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் அவருடைய உடல்நிலை கடந்த சிலநாட்களாக மோசமடைந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த நிலையில், கல்சூம் ஷெரிப்பின் உடல் இன்று காலை 6.45 மணிக்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக லாகூர் கொண்டு வரப்பட்டது. கல்சூம் உடலை கொண்டு வந்த விமானத்தில், நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும்  பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் வந்தனர். தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க நவாஸ் ஷெரீப் மற்றும் மகள் மரியம் நவாஸ், மருமகன்  ஆகியோருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.