உலகைச் சுற்றி


உலகைச் சுற்றி
x
தினத்தந்தி 14 Sep 2018 6:45 PM GMT (Updated: 14 Sep 2018 6:57 PM GMT)

3வது முறையாக பதவியில் தொடர ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே தேர்தலை சந்திக்க உள்ளார்.


* ஈரான் மீது விதித்து உள்ள பொருளாதார தடைகளை மதித்து செயல்படாமல், மீறுகிற நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசு தயார் ஆகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 100 நாள் செயல் திட்டம் ஒன்றை அறிவித்து உள்ளார். அதன்படி அங்கு 2 புதிய ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ், மியான்வாலி ரெயில் என பெயரிடப்பட்டு உள்ள அந்த ரெயில்களை இம்ரான்கான் நேற்று தொடங்கி வைத்தார்.

* 3-வது முறையாக பதவியில் தொடர ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே தேர்தலை சந்திக்க உள்ளார். அவர் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தால் அந்த நாட்டின் அரசியல் சட்டத்தை திருத்தி எழுத முடிவு செய்து உள்ளார்.

* ஐ.நா. சபையின் அமெரிக்க தூதராக உள்ள இந்திய வம்சாவளி நிக்கி ஹாலியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் திரைகள் அமைப்பதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 52 ஆயிரத்து 700 டாலர் (சுமார் ரூ.36 லட்சத்து 89 ஆயிரம்) செலவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

* அமெரிக்காவில் ரெட்மாண்ட் நகரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்று ‘எச்-1பி’ விசாவில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி உரிய சம்பளம் வழங்கவில்லை என புகார் எழுந்தது. இது பற்றிய புகாரை விசாரித்த அமெரிக்க தொழிலாளர் நலத்துறை, அந்த நிறுவனம் 12 பணியாளர்களுக்கு 3 லட்சம் டாலர் (ரூ.2 கோடியே 10 லட்சம்) வழங்குமாறும், அபராதமாக 45 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.31 லட்சத்து 50 ஆயிரம்) செலுத்துமாறும் உத்தரவிட்டு உள்ளது.

Next Story