உலக செய்திகள்

வியாழன் கிரகத்தில் அதிக அளவு தண்ணீர்! + "||" + Water on Jupiter

வியாழன் கிரகத்தில் அதிக அளவு தண்ணீர்!

வியாழன் கிரகத்தில் அதிக அளவு தண்ணீர்!
வியாழன் கிரகத்தில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க, ரஷ்ய, ஜப்பான் விஞ்ஞானிகள் குழு சேர்ந்து இதை கண்டுபிடித்து இருக்கிறது.
பூமியை விடப் பல மடங்கு தண்ணீர் வியாழனில் இருக்க வாய்ப்புள்ளதாக அந்தக் குழு கூறுகிறது.

முதலில், நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல், செவ்வாயிலும் தண்ணீர் இருந்ததற்கான அடையாளம் கிடைத்தது. இப்போது வியாழனில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.


கடந்த 1995-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி நாசா கலிலியோ என்ற சோதனைக் கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. வியாழன் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் 22 ஆண்டுகளுக்கு முன் நாசா இதை அனுப்பியது.

ஆனால் அப்போது இந்த விண்கலம், அங்கு தண்ணீர் இருப் பதைக் கண்டுபிடிக்க வில்லை. மாறாக பெரிய சிவப்புப் புள்ளி ஒன்று இருப்பதை மட்டும் கண்டுபிடித்தது.

கலிலியோ விண்கலம், வியாழனின் துணைக்கோள்கள் பனிக்கட்டியால் நிரம்பி இருப்பதாகக் கூறியது. இந்த நிலையில் தற்போது, வியாழனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது வியாழனில் சூரியனை விட 9 மடங்கு ஆக்சிஜன் அதிகம் உள்ளது. அதேபோல் பூமியைவிட பல மடங்கு அங்கு வளிமண்டலம் அடர்த்தியாக உள்ளது.

இதனால் கண்டிப்பாக அங்கு தண்ணீர் இருக்கும் என்று கூறப்படுகிறது. நாசா விஞ்ஞானிகளுடன், கிளெம்சன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

வியாழனில் உள்ள செந்நிறப் புள்ளியின் அளவு ஆசிய கண்டத்தைவிட பெரிதாக உள்ளது. இது முழுக்க முழுக்க தண்ணீரால் நிரம்பி உள்ளது. பூமியில் உள்ள அதிநவீன தொலைநோக்கியை வைத்தும், நாசா ஆய்வகப் பொருட்களை வைத்தும் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இதைச் சுற்றி பெரிய அளவில் மேகமூட்டம் நிலவுவதாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சிவப்புப் புள்ளியில் மட்டும், பூமியில் உள்ள கடல்களை விட அதிக தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், மொத்தமாக அந்தக் கிரகத்தில், பூமியை விட 5 மடங்கு அதிகம் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்று கணிக்கப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து பட்டுக்கோட்டையில் விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் எடுப்பது ஒருநாள் தடைபட்டது - கோவையில், குடிநீர் வினியோகம் பாதிப்பு
பலத்த மழை காரணமாக நீர்வரத்து பாதையில் மண் அடைத்துக்கொண்டதால் சிறுவாணி அணை யில் இருந்து குடிநீர் எடுப்பது ஒருநாள் தடைபட்டது. இதனால் கோவையில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.