உலக செய்திகள்

அதிகம் தூங்கினாலும் இதய நோய் வரும்! + "||" + Heart disease in Sleeping too much

அதிகம் தூங்கினாலும் இதய நோய் வரும்!

அதிகம் தூங்கினாலும் இதய நோய் வரும்!
அதிகம் தூங்கினாலும் இதயநோய் வரலாம் என்று ஜெர்மானிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெர்மனியின் மியூனிச் நகரில் இதய நோய் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு குறித்து மருத்துவ நிபுணர் எபாமேனோண்டஸ் பவுண்டாஸ், 10 லட்சம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட 11 ஆய்வுகள் மூலம், மிகவும் குறைவாக தூங்குவதால் இதயநோய் அபாயம் ஏற்படுவதைப் போல, தொடர்ந்து அதிகமாகத் தூங்கினாலும் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்.

மேலும், எந்தக் காரணிகளால் இதயம் பாதிக்கப்படும் என்பதைக் கண்டறிய இன்னும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஆய்வின்படி, மிகவும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்பு 11 சதவீதமாக இருக் கும் நிலையில், தொடர்ந்து அதிகமாகத் தூங்குபவர்களுக்கு 33 சதவீதம், அதாவது 3 மடங்கு அதிகமாக இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.