உலகைச்சுற்றி


உலகைச்சுற்றி
x
தினத்தந்தி 15 Sep 2018 10:45 PM GMT (Updated: 15 Sep 2018 7:33 PM GMT)

சீனாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது.

* மெக்சிகோ சிட்டியில் இசை விருந்து நடத்தப்படும் விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

* அமெரிக்காவில் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, வெர்ஜினியா மாகாணங்களில் ‘புளோரன்ஸ்’ புயல் தொடர்பான சம்பவங்களில் 5 பேர் பலியாகி உள்ளனர். 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளில் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். இயல்பு வாழ்க்கை அங்கு முடங்கி உள்ளது.

* சீனாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதைத் தடுப்பது மிகவும் சிக்கலாகவும், சவாலாகவும் அமைந்து இருப்பதாக அந்த நாட்டின் விவசாய அமைச்சகம் கூறுகிறது.

* பிரேசில் நாட்டில் கத்திக்குத்துக்கு ஆளான அதிபர் வேட்பாளர் ஜெயிர் போல்சொனரோ (வயது 63), கருத்துக்கணிப்பில் முன்னிலை பெற்று உள்ளார். அவருக்கு 26 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

* ருவாண்டா நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் விக்டோய்ரேவுக்கு அதிபர் பால் ககமேயை கொல்ல சதித்திட்டம் தீட்டிய வழக்கில் 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இப்போது அவருக்கு அதிபர் பால் ககமே மன்னிப்பு வழங்கி உள்ளார். இதனால் விக்டோய்ரே விடுதலை செய்யப்படுகிறார்.

* மோசடி குற்றச்சாட்டு காரணமாக நைஜீரிய நாட்டின் நிதி மந்திரி கெமி அடியோசன் பதவி விலகி உள்ளார். அவரது ராஜினாமாவை அதிபர் முகமது புகாரி ஏற்றுக்கொண்டு விட்டார்.



Next Story