உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; 5 பேர் பலி + "||" + Army helicopter crash in Afghanistan 5 killed

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; 5 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலியாயினர். இது பயங்கரவாதிகள் கைவரிசையா என விசாரணை நடத்தப்பட உள்ளது.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் மாலை படை வீரர்களை ஏற்றிக்கொண்டு ஒரு ராணுவ ஹெலிகாப்டர் சென்று கொண்டு இருந்தது. இந்த ஹெலிகாப்டர் மேற்கு பராஹ் மாகாணத்தில் திடீரென விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டர் விமானி, ராணுவ வீரர்கள் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

அதே நேரத்தில் இந்த விபத்தில், பயங்கரவாதிகளின் கைவரிசையும் இருக்கும் என சந்தேகிக்கப்படுவதாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் கூறினர். ஆனால் கவர்னர் செய்தி தொடர்பாளர் நாசர் மெஹ்ரி, தொழில்நுட்ப காரணங்களால்தான் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவித்தார்.

இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என ராணுவ அமைச்சகம் அறிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது: தலைமை ஆசிரியர் மகன் பலி
தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் தலைமைஆசிரியர் மகன் பரிதாபமாக இறந்தார்.
2. ஆப்கானிஸ்தான் ராணுவ தாக்குதலில் தலீபான் தளபதி பலி
ஆப்கானிஸ்தான் ராணுவ தாக்குதலில் தலீபான் தளபதி பலியானார்.
3. கார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித்து வந்த போது பரிதாபம்
மார்த்தாண்டம் அருகே வீட்டுக்கு தேவையான குடிநீரை பிடித்து வரும்போது, கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
4. திருவாரூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி லாரி மோதியது
திருவாரூரில் லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலியானார்.
5. விபத்தில் பலியான சிவகாசி ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு
விபத்தில் பலியான ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...